Home /News /employment /

ரிமோட் வேலை, ஹைப்ரிட் மாடல், குறைவான வேலை நேரம்.. இளைஞர்கள் விரும்புவது என்ன? சர்வே முடிவுகள்

ரிமோட் வேலை, ஹைப்ரிட் மாடல், குறைவான வேலை நேரம்.. இளைஞர்கள் விரும்புவது என்ன? சர்வே முடிவுகள்

ரிமோட் வேலை

ரிமோட் வேலை

வொர்க்-லைப் பேலன்ஸ் சரியாக இருக்க வீட்டிலேயே வேலை செய்வதை அனுமதிக்கலாமா அல்லது அலுவலகத்துக்கு வரவழைக்க வேண்டுமா என்பது பற்றி சரியான முடிவு எடுக்கப்படவில்லை.

  ஒரு சில நிறுவனங்கள் அல்லது துறைகளுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் (Work From Home) விருப்பம், கோவிட் தாக்கத்தால் உலகம் முழுவதும் ஒரு புதிய வேலை மாடலாக உருவாகியது. பெரும்பாலான துறைகளில், ஐடி முதல் ஆன்லைன் கல்வி வரை இது ஓரளவுக்கு சாத்தியமாகி உள்ள நிலையில், எந்த வகையான வேலை மாடல் அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்பது பற்றிய பல நிறுவனங்களும் ஆய்வு செய்து வருகிறது.

  குறிப்பாக, வொர்க்-லைப் பேலன்ஸ் சரியாக இருக்க வீட்டிலேயே வேலை செய்வதை அனுமதிக்கலாமா அல்லது அலுவலகத்துக்கு வரவழைக்க வேண்டுமா என்பது பற்றி சரியான முடிவு எடுக்கப்படவில்லை.

  சில நிறுவனங்கள், இரண்டையும் சேர்த்த ஹைப்ரிட் மாடல் சரியாக இருக்கும் என்று முயற்சித்து வரும் நிலையில், சமீபத்தில் இதைப்பற்றி ஒரு சர்வே நடத்தப்பட்டது. டெலாயிட் 2022 Gen Z மற்றும் மில்லினியல் சர்வேயின் அடிப்படையில், தற்போதைய இளம் தலைமுறை, வேலையில்லாத நிலை, கல்வி, மன ரீதியான பிரச்சனைகள் ஆகியவற்றில் சிக்கியுள்ளார்கள். மேலும், நல்ல வொர்க்-லைஃப் பேலன்ஸ், சாதகமான பணியிடம் மற்றும் கற்றுக்கொள்வதற்கான புதிய வாய்ப்புகள் ஆகிய அனைத்துமே இன்றைய இளம் தலைமுறைக்கு முக்கியமாக இருக்கிறன.

  மேலும், இந்த சர்வேயின் படி, கோவிட் தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தது போல முழு நேர வேலை என்பது அசௌகரியமாக இருக்கும் என்பதும், ஹைப்ரிட் மாடல் உடன் ரிமோட் வாய்ப்புகள் தான் சரியாக வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. வேலை மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதால், உயர் கல்வி, ஹாபி, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, பயணம் என்று பல விஷயங்களில் ஈடுபடுவதை அனைவரும் விரும்புகிறார்கள்.இந்த சர்வேயில், மொத்தம் 801 இளைஞர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.

  சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அதிக முக்கியத்துவம்: கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 95 சதவீதம் நபர்கள், சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் குறைக்க முயற்சிக்கின்றனர். உலகளவில், Gen Z தலைமுறை மற்றும் மில்லினியல்களுடன் ஒப்பிடுகையில், இந்தியர்கள் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க முன்வருவதையும் ஆய்வு தெரிவிக்கின்றது,

  ALSO READ | ஓஎன்ஜிசி 922 காலியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

  பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை:

  இந்தியாவில் உள்ள Gen Z மற்றும் மில்லினியல்கள், பிளாஸ்டிக் தடை பற்றியும் அக்கறை காட்டிவருகின்றனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்தாலே, சுற்றுச்சூழல் மேம்படும் என்பதை வலியுறுத்தி உள்ளனர்.

  நிதி ரீதியான பிரச்சனைகள் மற்றும் பார்ட் டைம் வேலை:

  சர்வேயில் கலந்து கொண்ட மூன்றில் இரண்டு பங்கு நபர்களுக்கு ஊதியம் பெறும் வேலையுடன், கூடுதலாக வேறு வேலையையும் செய்து வருகின்றனர். இதனால், ஓய்வு பெற்ற பின்பு, மாதாந்திரச் செலவுகளுக்கு பிரச்சனைகள் ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

  வொர்க்-லைஃப் பேலன்சை உண்டாக்க ஹைப்ரிட் வேலை மாடல்:

  வீடு, வாழ்க்கை மற்றும் வேலை ஆகியவற்றில் சமநிலையை உண்டாக்க, ஊழியர்களுக்கு ஏற்றவாறு நெகிழ்வான வேலை நேரத்தையும், ரிமோட் வேலை செய்யும் ஆப்ஷனையும் விரும்புவதாக கூறுகின்றனர். மேலும், ஒரு வாரத்தில் மொத்தமாக இவ்வளவு மணி நேரம் தான் வேலை செய்ய வேண்டும் என்பதை குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy, Survey

  அடுத்த செய்தி