ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பிஸினஸ் ப்ளான் இருந்தாலே போதும்.. ரூ.30லட்சம் வரை கடன் தரும் அரசு - சிறுபான்மையினருக்கு சூப்பர் தகவல்!

பிஸினஸ் ப்ளான் இருந்தாலே போதும்.. ரூ.30லட்சம் வரை கடன் தரும் அரசு - சிறுபான்மையினருக்கு சூப்பர் தகவல்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

TAMCO Loan and Interest Rate: உங்கள் அருகில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நகர வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு விவரங்களை மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 12%க்கும் அதிகமான மக்கள் மத சிறுபான்மையினராக உள்ளனர்.    இம்மக்களின் வறுமையை ஒழிக்கவும், கல்வியை உறுதிப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும்  மத்திய/மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதில், சில முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை இங்கு பார்ப்போம்.     

  தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம்: 

  எந்தவொரு ஜனநாயக சமூகத்திலும், நிறுவன ரீதியான நடவடிக்கை  (Institutional mechanisms)என்பது மிக முக்கியமானதாகும். அந்த வகையில், சிறுபான்மையினர் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகம் (national minority development finance corporation) கடந்த 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  இந்த கழகம், சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இந்த கழகத்தின், மாநில முகாமையாக (State Channelising Agency) தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ - TAMCO) செயல்பட்டு வருகிறது.

  இதையும் வாசிக்க: பெண்களுக்கான பிரத்தியேக அரசு வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..!

  தேசிய கழகத்திடம் இருந்து டாம்கோ நிறுவனம் கடன் நிதியைப் பெற்று, மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையினர் மக்களுக்கு கடன் உதவி வழங்கி வருகிறது.

  டாம்கோ செயல்படுத்தும் முக்கியத் திட்டங்கள் என்ன?  

  தனிநபர் காலக்கடன் திட்டம் (Individual Term loan Scheme): 

  சுயமாக தொழில் தொடங்க/வியாபாரம் மேற்கொள்ள விரும்பும்   பொருளாதாரத்தில்  பின்தங்கியுள்ள  சிறுபான்மையினர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 

  கடன் தொகைவட்டி விகிதம்ஆண்டு வருமான உச்ச வரம்பு
  திட்டம் 1: ரூ.20 லட்சம் வரையிலான கடன்களுக்கு6%கிராமப்புறங்களுக்கு - ரூ.98,000நகர்ப்புறங்களுக்கு - ரூ.1.20 லட்சம் ரூபாய்
  திட்டம் 1: ரூ.30 லட்சம் வரையிலான கடன்களுக்குஆண் 8%பெண் 6%திட்டம் 1-ன் கீழ் பயன்பெறமுடியாத நபர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை கொண்டவர்கள்

  கைவினை கலைஞர் திட்டம்: 

  சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் குறைந்த வட்டி விகிதத்தில், மூலப்பொருட்கள்/உபகரணங்கள்/இயந்திரங்கள்/கருவிகள் வாங்குவதற்கு இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கப்படுகிறது.

  கடன் தொகைவட்டி விகிதம்ஆண்டு வருமானம் உச்சவரம்பு
  ரூ.10 லட்சம் வரைஆண் - 5%பெண் - 4%கிராமப்புறங்களுக்கு - ரூ.98,000நகர்ப்புறங்களுக்கு - ரூ.1.20 லட்சம் ரூபாய்

   சிறுபான்மையினர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவித் திட்டம்:  

  ஆண் மற்றும் பெண் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பலகாரக்கடை, காலணி விற்பனை செய்தல், சிற்றுண்டி, ஜவுளி வியாபாரம், ஊறுகாய் மற்றும் அப்பளம் தயாரித்து விற்பனை செய்தல், கூடை பின்னுதல் போன்ற சிறு வியாபாரம் செய்து தங்களின் பொருளாதாரத்தினை உயர்த்திட, சிறுகடன் வழங்கும் திட்டம் மூலம் பின்வருமாறு கடன் வழங்கப்படுகிறது

  கடன் தொகைவட்டி விகிதம்ஆண்டு வருமான உச்ச வரம்பு
  திட்டம் 1: ரூ.1 லட்சம் வரையிலான கடன்களுக்கு7%கிராமப்புறங்களுக்கு - ரூ.98,000நகர்ப்புறங்களுக்கு - ரூ.1.20 லட்சம் ரூபாய்
  திட்டம் 1: ரூ.1.5 லட்சம் வரையிலான கடன்களுக்குஆண் -10%பெண் -8%திட்டம் 1-ன் கீழ் பயன்பெறமுடியாத நபர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை கொண்டவர்கள்

  எனவே, உங்கள் அருகில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூட்டுறவு நகர வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு விவரங்களை மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

  மேலும், விவரங்களுக்கு National minority development finance corporation  

  தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் : கலாஸ் மகால் பாரம்பரியக் கட்டிடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை- 600 005.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Entrepreneurship, Muslim