ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிகிரி தகுதி போதும் : தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

டிகிரி தகுதி போதும் : தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

Central University of Tamil Nadu : தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் Field Investigators பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித் துறை மற்றும் MGNCRE இணைந்து செயல்படும் திட்டத்தில் Field Investigator-ஆக பணிபுரிய 2 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு சமூக அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். திருவாரூர் மாவட்டத்தில் 3 மாதங்கள் பணிபுரிய வேண்டும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
Field Investigator2ரூ.7,000

கல்வித்தகுதி:

Social Work/ Sociology/ Economics/ Developmental Studies/ Disaster Management பாடங்களில் 55% மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்வர்.

Also Read : சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை... முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது நேர்காணலுக்கு நேரில் செல்லாம். விண்ணப்பதார்கள் புகைப்படம், அனுபவம் சார்ந்த விவரங்கள், கல்வி சான்றிதழ் போன்றவற்றுடன் இணைத்து இமெயில் மூலம் அனுப்பி வைக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி: chittaranjan@cutn.ac.in /

sreemsw18@gmail.com

நேர்காணல் இடம் & நேரம்:

Department of Social Work, NLBS-1, CUTN.

01/02/2023 காலை 10 - மதியம் 1.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Employment news, Job, University