கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் உள்ள கள ஒருங்கிணைப்பாளர் பணிக்குத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணியிடத்திற்குக் கலை/சமூக அறிவியல்/மனித நேயம் போன்ற பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்வர்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
கள ஒருங்கிணைப்பாளர் | 1 | ரூ.20,000 + 5000 |
கல்வித்தகுதி:
கலை/சமூக அறிவியல்/மனித நேயம் போன்ற பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நல்ல தொடர்பு திறன் உடையவராக இருக்க வேண்டும். மேலும் கணினி திறன் தேவை.
அனுபவம்:
தொழில் தொடங்குவது, தொழில்முனைவோர் போன்ற தொழில் சார்ந்த பணிகளில் அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணியிடத்திற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://b-u.ac.in/
நேர்காணல் இடம் மற்றும் நாள் :
Entrepreneurship Development Programme HUB,
Bharathiar University,
Coimbatore - 641 046, Tamil Nadu.
நாள் : 10.01.2023 காலை 10 மணி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bharathiar University, Jobs