எஃப்சிஐ (FCI) என்று அழைக்கப்படும் ஃபுட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (Food Corporation of India) ஆனது பஞ்சாப், ஹரியானா, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு, இமாச்சலப் பிரதேசம், டெல்லி, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்காக, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை விரைவில் ஏற்கவுள்ளது.
குரூப் 2, குரூப் 3, குரூப் 4 ஆகிய பல பதவிகளுக்கான இந்த விண்ணப்ப செயல்முறை ஆனது வருகிற ஜூலை மாதம் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஃபுட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பின் கீழ் மொத்தம் 4,710 பணியிடங்கள் நிரப்பப்படும் என்கிற தகவலும் கிடைத்து உள்ளது. இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஃபுட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளமான
recruitmentfci.in ஐ தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் இந்தவேலை வாய்ப்பின் கீழ், குரூப் 2 வில் 35 பணியிடங்களும், குரூப் 3 இல் 2521 இடங்களும், குரூப் 4 இல் (சௌகிதார்) 2154 இடங்களும் நிரப்பப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஃபுட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு 2022 : தகுதிகள்
இந்திய உணவுக் கழகம் அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட போர்ட்-இல் இருந்து 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு அல்லது பட்டதாரி நிலைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் ஃபுட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் பணிபுரிய விரும்புபவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். தகுதிகள் குறித்த மேலதிக விவரங்களை அறிய, இந்திய உணவுக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
ஃபுட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு 2022 : தேர்விற்கான செயல்முறை
ஃபுட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் பணிபுரிவதற்கான பதவிகளுக்கு விண்ணப்பித்த பிறகு, எழுத்துத் தேர்வு, உடல் பரிசோதனை, பொறுமைத் தேர்வு (patience test) மற்றும் ஆவணச் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள்.
ஃபுட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு 2022 : விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் இந்த ஃபுட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பதவிக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியாக சமர்ப்பிக்கலாம். முன்னரே குறிப்பிட்டபடி இந்த வேலை வாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அவ்வப்போது ஃபுட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிட வேண்டும்.
ALSO READ | டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியர் பணி: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
அறியார்தோர்களுக்கு: இந்திய உணவுக் கழகம் என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது முதலில் 1965 ஆம் ஆண்டில் சென்னையை தலைமை இடமாக கொண்டு நிறுவப்பட்டது. பின்னர் இது புதுடெல்லிக்கு மாற்றப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.