புது டெல்லியில் உள்ள இந்திய உணவுக் கழகம் தலைமையகம் மற்றும் நாட்டின் பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைந்துள்ள பல்வேறு அலுவலகங்களில் உள்ள காலி பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆட்சேர்ப்பு அறிவிப்பு, விண்ணப்ப செயல்முறை, பணிக்கான நிபந்தனைகள், தேர்வுக்கான தேதி விரைவில் வெளியாகும் என்றும் நம்பப்படுகிறது.
காலியிடங்கள்:
நிலை இரண்டு (Category II Posts) - 35 பணியிடங்கள்
நிலை மூன்று (Category III Posts) - 2521 பணியிடங்கள்
நிலை நான்கு (Category IV Posts) - 2154 பணியிடங்கள்
மொத்தம்: 4710
ஆட்சேர்ப்பு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தேர்வர்கள் இப்போதிலிருந்து எழுத்துத் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
நீட் தேர்வு முடிவடைந்தபின் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும் - அமைச்சர் பொன்முடி
காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தேர்வு அறிவிப்பில் ( ஆட்சேர்ப்பு அறிவிப்பில்) தெளிவாக்க் கொடுக்கப்படும். தேர்வு தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் மட்டும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
பழனி திருக்கோயிலில் வேலை: இந்து அறநிலையத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்திய உணவுக் கழகம்:
இந்தியாவின் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இந்திய உணவுக் கழகம் உள்ளது. விவசாயிகளிடம் இருந்து உணவு தானியங்களைக் கொள்முதல் செய்வது, அதனை சேமித்து வைப்பது போன்ற முக்கிய பணிகளில் இந்திய உணவுக் கழகம் ஈடுபட்டு வருகிறது.
ஐந்து மண்டல அலுவலகங்களுடனும் 26 வட்டார அலுவலகங்களுடனும் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்திய உணவுக் கழகம் இந்திய கோதுமை உற்பத்தியில் 15-20 விழுக்காடும் அரிசி உற்பத்தியில் 12-15 விழுக்காடும் கொள்முதல் செய்கிறது. இவற்றை இந்திய அரசு நிர்ணயித்த விலையில் விவசாயிகளிடமிருந்து வாங்குகிறது. இந்த விலை குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum support Price) எனப்படுகிறது.
மத்திய அரசின் உணவு மற்றும் வேளாண் அமைச்சகங்களின் முடிவுகளை செயலாக்குவதே இதன் பணியாக உள்ளது
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.