தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பூவிருந்தவல்லி பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பண்ணை மேலாளர் பணிக்கு ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். கால்நடை அறிவியல் / விவசாயம் / ஆகிய பாடங்களில் இளங்கலைப் பட்டம் / வாழ்க்கை அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணி தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Farm Manager | 1 | ரூ.40,000 |
கல்வித்தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.V.Sc. & A.H./ B.Sc (விவசாயம்) அல்லது Life Sciences பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு நேரடி நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://tanuvas.ac.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் இணைத்து அதனை நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் இடம் & நாள் :
Post Graduate Research Institute in Animal Sciences, Kattupakkam,
Chengalpattu District – 603 203.
நாள்: 20.01.2023 காலை 10.30 மணி
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment news, Job Vacancy, Jobs