இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையில், கிட்டத்தட்ட 10,000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு வெளியாகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகினற்ன. அதன் உண்மை நிலை குறித்து தற்போது பார்க்கலாம்.
இரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection force) என்பது இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளுள் ஒன்றாகும். இந்திய இரயில்வேயின் பாதுகாப்பிற்கும், பயணிகளின் பாதுகாப்பிற்கும் உருவாக்கப்பட்டது. முன்னதாக, கடந்த 2018ம் ஆண்டு 8,619 கான்ஸ்டபிள் (நிர்வாகம்) பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்றது. 2020 மார்ச் 11ம் தேதி நிலவரப்படி, ஒப்பளிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 74,830 ஆகவும், நிரப்பப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 61,869 ஆகவும் உள்ளதாக மக்களவையில் கேள்வி நேரத்தில் ரயில்வேத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதையும் வாசிக்க: அஞ்சல் துறையில் 60,000 வேலைவாய்ப்பு? - வைரலாகும் தகவல் உண்மையா?
கடந்த, ஓராண்டாகவே, இந்திய ரயில்வே பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் குறித்த தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம், 9000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு குறித்து செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த செய்தியை ரயில்வே அமைச்சகம் மறுத்தது. இதுபோன்ற அறிவிப்புகள் எதையும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்தது.
இதையும் வாசிக்க: ரேஷன் கடை பணிகளுக்கான காலியிடங்கள்: வெளியானது முக்கிய அப்டேட்!
இந்நிலையில், மீண்டும் 10,000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு வெளியாகியுள்ளதாக செய்திகள் பரவி வருகினற்ன. ஆனால், ரயில்வே துரையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் எதையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, https://rpf.indianrailways.gov.in/RPF//index.jsp என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs