வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் அரசின் போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகளில் பயிற்சி அளிக்க விரும்புவோர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளாகப் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரரகவராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன” என்று கூறியுள்ளார்.
அதில் TNPSC,TNUSRB,SSC,RRB,IBPS,TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். எனவே, 38 மாவட்டங்களில் இயங்கும் இலவச பயிற்சி வகுப்புகளில் பயிற்சியாளராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள், முன் அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள், போட்டித்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
Also Read : இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு : முழு விவரங்கள்
என்ற http://bit.ly/facultyregistrationform என்ற கூகுள் லிங்கில் உள்ள விண்ணப்பப்படிவத்தை 10.01.2023 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் இது குறித்து விவரங்களுக்கு 044-22501006/22501002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Employment, Jobs