ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மல்டி-மீடியா, இதழியல் படித்தவர்களுக்கு மத்திய அரசில் பணிபுரிய வாய்ப்பு..!

மல்டி-மீடியா, இதழியல் படித்தவர்களுக்கு மத்திய அரசில் பணிபுரிய வாய்ப்பு..!

என்ஐஎஸ்ஜி

என்ஐஎஸ்ஜி

NISG job alert : நவீன அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனமான NISG இல் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நவீன அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனமான NISG மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்திற்குக் கீழ் செயல்படுகின்றனர். இந்த நிறுவனத்தில் UIDAI சமூக ஊடக பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்Executive Social Media  – UIDAI
பணி விதம்5 வருடத்திற்கு ஒப்பந்தப் பணி
வயதுஅதிகபட்சம் 35 வயது வரை
சம்பளம்வருடத்திற்கு 3,00,000 முதல் 6,00,000 வரை.

கல்வித்தகுதி:

தொலைத்தொடர்பு, இதழியல், மல்டி-மீடியா, அனிமேசன் & VFX அல்லது வியாபாரம் நிர்வாகம் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 2 வருடம் அனுபவம் வேண்டும். சமூக ஊடகம் குறித்த புரிதல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : ரூ.43,000 சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை.. தேர்வு இல்லை..

விண்ணப்பிக்கும் முறை:

மேற் குறிப்பிட்ட பணிக்கு http://careers.nisg.org/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : http://careers.nisg.org/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 14.12.2022.

First published:

Tags: IT JOBS, Jobs