தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் இனி கிராமப்புற வங்கித் தேர்வுகள் - நிர்மலா சீதாராமன்

தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் இனி கிராமப்புற வங்கித் தேர்வுகள் - நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
  • News18
  • Last Updated: July 4, 2019, 2:53 PM IST
  • Share this:
கிராமப்புற வங்கி பணிகளுக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தி தவிர 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும் என்று மக்களவையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை வங்கி பணிகளுக்கான தேர்வை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) நடத்துகிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு பொதுவாக ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படுகிறன.

இந்நிலையில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுதி செய்யும் வகையில், கிராமப்புற வங்கி வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தவிர 13 பிராந்திய மொழிகளில் கேள்வித் தாள்கள் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


இதனால் தமிழ், தெலுங்கு, உருது, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி மொழிகளிலும் கேள்வித் தாள்கள் வழங்கப்பட உள்ளன.

மேலும் பார்க்க:
First published: July 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading