அக்னிபாத் திட்டத்தில் கீழ் திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் இந்திய ராணுவத்தில் பல பிரிவுகளில் சேரலாம். இந்த திட்டத்தின் படி இந்திய கடற்படையில் அக்னிவீரர் (எஸ்.எஸ்.ஆர்) 2023-ம் ஆண்டுக்கான 1400 காலிப்பணியிடங்களுக்கான வீரர்கள் சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் 8 ஆம் தேதியில் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் தொடங்க உள்ளது.
அக்னிவீரரை தேர்வு செய்ய மூன்று நிலை தேர்வு முறை நடைபெறும். இவை பெருமளவு பெறப்படும் விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களை கண்டறிவதற்காக நடத்தப்படுகிறது. ஒதுக்கப்பட்ட 1400 பணியிடங்களுக்குத் தகுதியானவர்களைக் கணினி வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை என்ற மூன்று நிலைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர். ஒரு நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள அக்னிவீரர் அறிவிப்புப் படி டிசம்பர் 17 ஆம் தேதி விண்ணப்பங்கள் முடிவடைகிறது.
அதனைத்தொடர்ந்து விண்ணப்பதார்களுக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும். கணினி வழி தேர்வில் அடையும் மதிப்பெண்களைப் பொறுத்தே அடுத்தகட்ட நிலைக்குச் செல்ல முடியும். எனவே தேர்வில் தேர்ச்சி அடையத் தேவையானவற்றைப் பற்றி பார்ப்போம்.
அக்னிவீரர் (எஸ்.எஸ்.ஆர்) :
கடற்படையில் அக்னிவீரராக எஸ்.எஸ்.ஆர் பிரிவில் பணிபுரிய நீங்கள் முன்பு எஸ்.எஸ்.ஆர் பிரிவு பணிகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். கடற்படையின் உயர் தொழில்நுட்ப பிரிவு தான் எஸ்.எஸ்.ஆர்(Senior Secondary Recruit).ராணுவக் கப்பலில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பணிபுரிய வேண்டும். அதில் விமானம் தாங்கிகள்,ஏவப்பட்ட ஏவுகணையை அழிக்கும் கருவி, போர்க்கப்பல் தாக்குதல் கருவி, நீர்மூழ்கிக் கப்பல் போன்றவற்றும் அடங்கும். பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பணியாற்ற வேண்டும். உயர் ரக கருவிகளான ரேடார்,சோனார், ஆயுதங்கள் உபயோகப்படுத்துவது போன்றவற்றை பணிகளும் உள்ளது. இதற்காகப் பயிற்சி ஐஎன்எஸ் சில்கா-வில் வழங்கப்படும்.
நிலை 1 : கணினி வழி தேர்வு :
கணினி வழி தேர்வில் பணிக்கு அடிப்படையான கேள்விகள் கேட்கப்படும். புறநிலை கேள்விகளாக இருக்கும். அதற்குச் சரியான பதில் அளிக்கப்படும் என்னும் நிலையில் கட் ஆப் மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த தேர்வு மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் நடைபெறும். மாநில அளவில் உள்ள விண்ணப்பதார்களில் அடிப்படையில் தேர்ச்சி விகிதம் மாற்றம் பெரும். ஒரு வேலை தேர்வர்கள் ஒரே மாதிரியான கட் ஆப் எடுத்திருந்தால்,12 ஆம் வகுப்பில் அவர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்தகட்ட தேர்வுக்குச் செல்வர். 12 ஆம் வகுப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் உயிரியல்/வேதியியல்/கணினி அறிவியல் போன்ற பாடங்களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.
கேள்வித் தாள் 100 மதிப்பெண்களைக் கொண்டதாக இருக்கும். ஒரு கேள்விக்கு 1 மதிப்பெண் வழங்கப்படும். கேள்விகளுக்குக் கொடுக்கப்பட்ட பதில்களிலிருந்து சரியான பதிலைத் தேர்வு செய்ய வேண்டும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் வினாத்தாள் இருக்கும். ஆங்கிலம்,அறிவியல், கணிதம் மற்றும் பொது அறிவு பாடங்களின் அடிப்படையில் கேள்விகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
12 ஆம் வகுப்புக்கு ஏற்ற அளவில் தான் வினாத்தாள் வடிவமைக்கப்படும். மேலும் தவறாகப் பதில்களுக்கு (Negative Marking) 0.25 மதிப்பெண்கள் குறைக்கப்படும். தேர்வுக்கான கால அவகாசம் ஒரு மணி நேரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான பாடத்திட்டங்கள்:
அறிவியல் பாடத்தில் முதன்மையாக கேட்கப்படும் தலைப்புகள் இயற்பியல், உயிரியல் மற்றும் கணினி அறிவியல்.
இயற்பியலில் அளவீடு, இயக்கவியல், இயக்க விதிகள், ஆற்றல், சக்தி, புவியீர்ப்பு, திட மற்றும் திரவங்களின் இயக்கவியல், வெப்ப இயக்கவியல், அலைவுகள், மின்னியல், காந்த விளைவு, மின்காந்தம் அலைகள்,ஒளியியல்,கதிர்வீச்சுகள்,செமிகண்டக்டர் கருவிகள், தொடர்பியல் கூற்று, உலோகம், கரிம வேதியியல், உணவு,ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய தலைப்புகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
கணிதத்தில் உறவுகள் மற்றும் செயல்பாடுகள், லோகரதிதம், முக்கோணவியல், கணித தொடர்கள், ரெக்டாங்கல் மற்றும் வரிகள் பற்றிய கணிதம், செட்ஸ், செட் கோட்பாடு, Statistics, வடிவியல் ஆகியவை முதன்மையான தலைப்புகள் ஆகும்.
ஆங்கிலத்தில் Verbs/Tense,Punctuation,Passage, Preposition,indirect/indirect speech, Synonyms and Antonyms,Meanings of difficult words, pronouns,Use of adjective,Compound preposition,Determiners ஆகிய பாடத்தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படும்.
பொது அறிவு பொருத்தவரை கலாச்சாரம், மதம், புவியியலில் பிரிவில் ஆறு,மலைகள், துறைமுகம் போன்றவை முக்கியமாகப் பார்க்கவேண்டியவை. அதனைத்தொடர்ந்து, சுதந்திரப் போராட்டங்கள், விளையாட்டு, பாதுகாப்புத் துறை, போர்கள், அண்டை நாடுகள் பற்றிய அறிவு, நடப்பு நிகழ்வுகள், தேசத்தின் முக்கிய நிகழ்வுகள், பாரம்பரியம், வரலாறு, விடுதலை போராட்ட தலைவர்கள், தேசிய முக்கிய தலைவர்கள், தேசிய பாடல், மொழி,விலங்கு, நினைவுச் சின்னங்கள்,தலைநகர்கள், ரூபாய், நோய் , விருதுகள் ஆகிய தலைப்புகள் பற்றித் தெளிவான அறிவு.
இந்த கட்டுரையில் குறிப்பிட்ட தலைப்புகளில் கவனம் செலுத்தினால் தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறலாம். இதற்கு எதில் படிப்பது என்று கேள்வி எழுப்பினால், நீங்கள் 1 ஆம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரை படித்த பாடப்புத்தகங்களே போதுமானது என்பது தான் பதிலாக இருக்கும். குறிப்பாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தங்கள் இந்த தேர்வுக்கு உதவியாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Agnipath, Indian Navy, Jobs