Home /News /employment /

ESIC 491 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு - எப்படி விண்ணப்பிக்கலாம்?

ESIC 491 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு - எப்படி விண்ணப்பிக்கலாம்?

 ESIC

ESIC

ESIC Recruitment 2022 : விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப கடைசி நாள் ஜூலை 18 ஆகும்.

    ஊழியர்களின் மாநில இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC - Employees State Insurance Corporation) அமைப்பானது  உதவி பேராசிரியர்கள் (Assistant Professors) பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்து உள்ளது.

    ESIC என்பது மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் உள்ள முக்கிய சட்டப்பூர்வ சமூக பாதுகாப்பு அமைப்பாகும். ESIC PGMISRS மற்றும் ESIC மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ வெப்சைட்டான www.esic.nic.in-க்கு சென்று இந்த வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம். விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப கடைசி நாள் ஜூலை 18 ஆகும்.

    ஆசிரியர் பணியிடங்கள் நேரடி ஆட்சேர்ப்பை அடிப்படையாக கொண்டவை மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் படிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். படிவத்தை பிரிண்ட் எடுத்து, விவரங்களைப் பூர்த்தி செய்து வரும் ஜூலை 18, 2022-க்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும். உதவிப் பேராசிரியருக்கான இந்த துணைப் பணியிடங்கள், விண்ணப்பதாரர்களுக்கான காலிப் பணியிடங்களை வகை வாரியாகப் பிரித்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

    சமீபத்திய இந்த வேலைவாய்ப்புகள் அனடாமி, பயோகெமிஸ்ட்ரி, டென்டிஸ்ட்ரி, ஜெனரல் மெடிசின், ஆர்த்தோபீடிக்ஸ் போன்ற பல துறைகளில் காலியாக உள்ள 491 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிக்கப்பட்டு உள்ளன. ESI PGIMSR மற்றும் ESIC மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, உண்மையான தேவையை பொறுத்து காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். இது தொடர்பான புதுப்பிப்புகள் அறிவிக்கப்படும், மேலும் தேர்வு வாரியம் நடத்தும் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    ESIC உதவி பேராசிரியர் பணிக்கான தகுதிகள்:

    வயது:

    ESIC உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு 40. இருப்பினும், இடஒதுக்கீடு மற்றும் பிற சிறப்புப் பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.

    கல்வி:

    ஸ்பெஷலிஸ்ட் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில் MD/MS-க்கு சமமான DNB இன் MD அல்லது MS அல்லது டிப்ளமேட் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் மூன்று வருட ஆசிரியர் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம் அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு, சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டம், TET தகுதி அல்லது உதவி பேராசிரியராக இருந்த அனுபவம் தேவை. பல் மருத்துவத்திற்கு எம்.டி.எஸ் அல்லது சம்பந்தப்பட்ட பாடத்தில் அல்லது அதற்கு இணையான ஒன்றில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் கற்பித்த அனுபவம் தேவை.

    விண்ணப்ப கட்டணம்:

    SC/ST/PwD/ துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் (ESIC பணியாளர்கள்), பெண் விண்ணப்பதாரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

    எப்படி விண்ணப்பிப்பது.?

    * www.esic.nic.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும்

    * உதவிப் பேராசிரியர் பணி நியமன அறிவிப்புக்கான (Assistant Professor recruitment notice) லிங்கை கிளிக் செய்யவும்

    * pdf-ஐ டவுன்லோட் செய்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்

    * தேவையான அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, கீழ்காணும் முகவரிக்கு போஸ்ட் செய்யவும்.

    The Regional Director, ESI Corporation,
    Panchdeep Bhawan, Sector-16 (Near Laxmi Narayan Mandir),
    Faridabad- 1210002, Haryana.

    முன்பே குறிப்பிட்டபடி தேர்வு செயல்முறை தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் நேர்காணலை உள்ளடக்கியது. ESIC-யால் முடிவெடுக்கப்பட்ட பணியிடங்களுக்கான நேர்காணல் பொருத்தமான இடத்தில் நடைபெறும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி