இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்ஜினியர்களுக்கு வேலை காத்திருக்கு…

சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2 வருட பணி அனுவபமும் இருக்க வேண்டும்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இன்ஜினியர்களுக்கு வேலை காத்திருக்கு…
இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு
  • News18
  • Last Updated: December 8, 2018, 6:45 PM IST
  • Share this:
டெல்லியிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 79 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இதில் சிவில் பிரிவில் 52 இடங்களும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 29 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி டிசம்பர் 15.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 16-12-2018 நிலவரப்படி 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2 வருட பணி அனுவபமும் இருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ரூ. 250-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். இக்கட்டணமும் அவர்கள் தேர்வை எதிர்கொள்ளும்போது திருப்பி அளிக்கப்படும். ஏனைய பிரிவினர் ரூ. 500-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடைசி தேதி: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 15. தேர்வு முறை உள்ளிட்ட பிற விவரங்களுக்கு https://www.esic.nic.in/attachments/recruitmentfile/3841eba79191c73c2ada437e89b1a42a.pdf, https://www.esic.nic.in/recruitments/index/page:4?url=recruitments ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch
First published: December 8, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading