மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கொல்கத்தா ESI மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ;
16.05.2022 மாலை 4 மணி வரை. அதன்பின், பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
காலிபணியிடங்கள்:
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் MD/MS/DNB போன்ற மருத்துவப் படிப்புகள் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
பேராசிரியர் |
ரூ 2,28,942/ |
இணை பேராசிரியர் |
ரூ. 1,52,241/- |
உதவி பேராசிரியர் |
ரூ. 1,30,797 |
பணி ஒப்பந்த காலம்: 12 மாதங்கள். 70வயது முடிவடையும் வரை பணியில் இருக்க முடியும். 12 மாதங்களுக்குப் பிறகு அல்லது 70 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.
விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை
https://www.esic.nic.in/ என்ற இணையதாத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர் சமீபத்திய புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், மாநில மருத்துவ கவுன்சில்/தேசிய மருத்துவ கவன்சில் அளித்த அங்கீகாரம் உள்ளிட்ட நகல்கள் இணைக்க பட வேண்டும்.
அனைத்து பணியிடங்களுக்கும் நேர்காணல் நடத்தப்படும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி,
ESI- PGIMSR & ESIR MEdical College, Joka
Diamond Harbour road, Kolkatta - 700104
Tel: (033) 2950 0731
(அல்லது)
deanpgi-joka.wb@esic.nic.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம்: அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை பெற தகுதியுடைவர்கள்.
ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.225 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இதையும் வாசிக்க:
சென்னை மாநகராட்சியில் 60 மருத்துவப் பணியிடங்கள் : உடனே விண்ணப்பியுங்கள்
நேர்காணல்:
நேர்காணல் தேர்வுக்காக தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நேர்காணல் நடைபெறும் இடம்:
DEAN OFFICE,
Academic Block, 2nd Floor, ESIC MEDICAL
COLLEGE, Joka,
Diamond Harbour Road,
Kolkata 700104.
மேலும், விவரங்களுக்கு
இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.