இஎஸ்ஐ நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா? 539 காலியிடங்கள்!

news18
Updated: September 23, 2018, 9:10 PM IST
இஎஸ்ஐ நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா? 539 காலியிடங்கள்!
மாதிரிப் படம்
news18
Updated: September 23, 2018, 9:10 PM IST
எம்பிளாயீஸ் ஸ்டேட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் எனப்படும் இஎஸ்ஐ நிறுவனத்தில் 539 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எவ்வளவு காலியிடங்கள்: இந்நிறுவனத்தில் சோஷியல் செக்யூரிட்டி ஆபிஸர், கிரேடு 2 மேலாளர், சூப்பரின்டென்டண்ட் பிரிவுகளில் 539 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி பயன்பாடு தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 2018, அக்டோபர் 5-ம் தேதி நிலவரப்படி விண்ணப்பதாரர்களின் வயது 21 முதல் 27-க்குள் இருக்க வேண்டும். எனினும், எஸ்சி, எஸ்டி பிரிவினர், ஓபிசி பிரிவினர், முன்னாள் படை வீரர்கள் உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் படை வீரர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 ஆகும். இதர பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும்.

கடைசி தேதி: ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கடைசி தேதி அக்டோபர் 5. மேலும் விவரங்களுக்கு www.esic.nic.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.
First published: September 23, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...