ஈரோடு மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021 : 50 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்ட தன்னார்வலராக சேவை புரிய விருப்பமுள்ளவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்ட தன்னார்வலராக சேவை புரிய விருப்பமுள்ளவர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

 • Share this:
  ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பவானி, பெருந்துறை, கோபி செட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் கொடி முடி ஆகிய இடங்களில் சட்டப்பணிகள் குழுவிற்கு 50 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

  Volunteers எனப்படும் சட்ட தன்னார்வலராக பணிபுரிய 50 பணியிடங்கள் காலியாக உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

  கல்வித்தகுதி :

  ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள், மருத்துவர்கள் பயிலும் மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் போன்றோர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

  மதிப்பூதியம்:

  சட்ட தன்னார்வலர்களுக்கான கடமை சேவை மட்டுமே, இது நிரந்தர பணிக்கானது அல்ல முற்றிலும் தற்காலிகமானது மற்றும் அதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை சேவைக்கு தகுந்த வெகுமானம் மட்டுமே அளிக்கப்படும்.

  தேர்வு செயல் முறை:

  விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் தேதி மற்றும் இடம் மார்ச் 10ம் தேதிக்கு முன் விண்ணப்பதாரருக்கு அழைப்பு மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ தெரிவிக்கப்படும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  விருப்பமுள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை நிரப்பி பதிவு தபாலில் கீழே கண்ட முகவரிக்கு 01.03.2021 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பக் கோரப்படுகிறது.

  முகவரி:
  செயலர்,
  ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,
  ADR கட்டிடம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
  ஈரோடு.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: