Home /News /employment /

EPFO வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.39100/ – மாதச் சம்பளம்

EPFO வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ரூ.39100/ – மாதச் சம்பளம்


EPFO வேலைவாய்ப்பு அறிவிப்பு

EPFO வேலைவாய்ப்பு அறிவிப்பு

விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 23, 2021

    ஊழியர் சேமநல நிதி அல்லது ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதாந்த சம்பளத்தில் தொழில்தருநர் சார்பிலும் தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்வதாகும். இந்தப்பங்களிப்புப்பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் மீளப்பெற்றுக் கொள்ளலாம்.

    இங்கு தற்போது காலியாக உள்ள துணை இயக்குனர், உதவி இயக்குனர், உதவி தணிக்கை அதிகாரி & தணிக்கையாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 98 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு/ நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    விளம்பர எண்No.HRM­VII/1(22)/Audit/2020 /E­2655
    நிறுவனம்Employees’ Provident Fund Organisation (EPFO)
    வேலையின் பெயர்Deputy Director, Assistant Director, Assistant Audit Officer & Auditor
    காலிப்பணி இடங்கள்98
    தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்து தேர்வு/ நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
    வயது56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதிசெப்டம்பர் 8, 2021
    விண்ணப்பிக்க கடைசி தேதிஅக்டோபர் 23, 2021
    கல்வி தகுதி

    B.Com and passed the SAS examination

    விண்ணப்பிக்கும் ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து ஒத்த பதவிகளை (analogous posts) வகிக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    விண்ணப்ப முறைOffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்No fees
    இணையதள விவரம் www.epfindia.gov.in

    EPFO வேலைவாய்ப்பு காலிப்பணியிட விவரங்கள் : 



























    வேலையின் பெயர் காலிப்பணியிட விவரங்கள்
    Auditor34
    Assistant Audit Officer26
    Assistant Director (Audit)25
    Dy. Director (Audit)13
    Total98

    EPFO வேலைவாய்ப்பு சம்பள விவரம் : 























    வேலையின் பெயர்சம்பள விவரம்
    Deputy Directorரூ.15600-39100/-
    Assistant Directorரூ.15600-39100/-
    Assistant Audit Officerரூ.9300-34800/-
    Auditorரூ.9300-34800/-

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/HRM7_Deputation_Audit_1236.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி