வீடுகளில் மூலிகை வளர்க்கும் திட்டத்தை தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், ரூ. 1500க்கு மதிப்புள்ள மூலிகை தோட்டங்களில் இடம்பெறும் பொருட்கள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.
பண்டைய காலத் தமிழர்கள் உணவே மருந்து, மருந்தே உணவு என்ற வாழ்வினைக் கொண்டிருந்தனர். இந்த வாழ்வியலை மீள் உருவாக்கம் செய்யவும், தமிழ் மருத்துவத்தை பொது சன மக்களிடம் கொண்டு செல்லவும் தமிழ்நாடு அரசு கடந்த 2022-23 நிதியாண்டில், வீடுகளில் மூலிகை வளர்க்கும் திட்டத்தை அறிவித்தது.
இந்த திட்டத்தின் கீழ் துளசி, கற்பூரவள்ளி, வல்லாரை உள்ளிட்ட 10 வகையான மூலிகைச் செடிகள் தோட்டக்கலை பண்ணைகளில் கொள்முதல் செய்யப்பட்டு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுதவிர, செடி வளர்ப்புப் பைகள், 2 கிலோ தேங்காய் நார் கட்டிகள், மண்புழு உரம், தொழில் நுட்ப கையேடு, போக்குவரத்து மற்றும் ஆவணப்படுத்துதல் என மொத்தம் ரூ. 1500 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த மொத்த தொகையில், அரசு மானியமாக ரூ. 750 வழங்கும். விண்ணப்பதாரர் தனது பங்களிப்புத் தொகையாக ரூ. 750 செலுத்த வேண்டும்.
இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். வீட்டு மூலிகைத் தோட்டத்தளைகளை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் / Application Form பக்கத்தில் தேவைப்படும் விவரங்கள் அளித்து, வீட்டு முகவரி சான்று/ஆதார் அட்டை (அல்லது ஏதாவது ஒரு அடையாள ஆவணம்) மற்றும் பயனாளியின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களைத் தெரிந்து கொள்ள அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entrepreneurship