பிரதமரின் முத்ரா கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் மட்டும் 4 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த தொகை ரூ.1,99068.64 கோடியாக உள்ளது.
முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு, குறுசிறு நிறுவனங்களுக்கான முத்ரா கடன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், சிறிய அளவிலான உற்பத்தி நிறுவனங்கள், வணிகர்கள், வாடகை வண்டி நிறுவனங்கள், சாலையோர வியாபாரிகள், கைவினை கலைஞர்கள் போன்றவர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.50,000/- வரையிலான கடன்களுக்கு, முத்ரா சிஷூ கடன் பிரிவின் கீழும், ரூ.50,000-க்கும் மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு முத்ரா கிஷோர் கடன் பிரிவின் கீழும், ரூ. 5 லட்சத்திற்கும் மேல் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு
முத்ரா தருண் கடன் பிரிவின் கீழும் கடன்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், முத்ரா கடன் பயனாளிகள் தொடர்பாக திமுக எம்.பி கலாநிதி வீராசாமி எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் காரத் எழுத்து மூலம் பதில் அளித்தார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, 4,03,63,219 கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த தொகை ரூ.1,99068.64 கோடியாகும். மாவட்ட அளவில் கடலூர் மாவட்டதில் அதிகபட்சமாக 17.8 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன்களும், இரண்டாவதாக திருச்சியில் 17.1 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் 16.4 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன்களும், காஞ்சிபுரத்தில் 16.3 லட்சத்துக்கும் மேற்பட்ட கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடன்கள் எண்ணிக்கையில் முன்னணியில் உள்ள ஐந்து மாவட்டங்கள்:
கடலூர் | 17.8 லட்சம் |
திருச்சி | 17.1 லட்சம் |
சென்னை | 16.4 லட்சம் |
காஞ்சிபுரம் | 16.3 லட்சம் |
தஞ்சாவூர் | 13.3 லட்சம் |
கடன் அளிக்கப்பட்ட தொகையில் உள்ள முதல் ஐந்து மாவட்டங்கள்:
சென்னை | ரூ.12934.31 கோடி |
கோயம்புத்தூர் | ரூ. 9476.43 கோடி |
காஞ்சிபுரம் | ரூ.8357.56 கோடி |
திருச்சி | ரூ. 7748.37 கோடி |
கடலூர் | ரூ. 6837.19 கோடி |
கடன் வழங்கப்பட்ட தொகை (Disbursed Amount) அடிப்படையில் பார்த்தால், சென்னை மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் ரூ.12934.31 கோடி கடன் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. அடுத்த இடங்களில் இருக்கும் கோயம்புத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு முறையே ரூ. 9476.43, ரூ.8357.56 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் உடனடியாக அருகில் உள்ள பொதுத்துறை/தனியார்/கிராம வங்கி/கூட்டுறவு வங்கிக்குச் சென்று கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பியுங்கள். மேலும், விவரங்களுக்கு mudra.org.in என்ற இணையதளத்தை அணுகுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entrepreneurship