தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரிதமின் இணைப்பு வழங்க இணையதளம் (Fast Track Power Supply Scheme) மூலம் விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முன்னதாக, 2022-23ம் ஆண்டு மானிய கோரிக்கையின்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கான துரிதமின் இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் அறிவித்தார்.
இத்திட்டத்தில் மின் மோட்டார் குதிரைத்திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் ஆநிதிராவிடர்களுக்கு 900 எண்ணிக்கையும் பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையில் மொத்தம் 1,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த விவசாயிகளாகவும் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும்.
துரித மின் இணைப்புத்திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 HP (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 இலட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.25,000/-ம், 7.5 HP (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.27,500/-ம், 10 HP (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் ரூ. 3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.30,000/-ம், 15 HP (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டனம் ரூபாய் 4 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.40,000/- கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாத வீண்ணப்பத்தாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.
Horse Power | 90%மானியம் | 10% பங்களைப்புத் தொகை | மொத்தம் |
---|---|---|---|
5 HP | 2.25 லட்சம் | 25,000 | 2.50 |
7.5 HP | 2.47 லட்சம் | 27,500 | 2.75 |
10 HP | 2.70 லட்சம் | 30,000 | 3.00 |
15 HP | 3.60 லட்சம் | 40,000 | 4.00 |
கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத் தொகையுடன் புதியதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், ”அ” பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண், மின்வாரியத்தில் பதிவுசெய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entrepreneurship, Tamil Nadu