TAHDCO Drone Training Program: அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வேளான்துறைகளை நவீனப்படுத்த ட்ரோன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, பூச்சி மருந்து தெளிப்பதில் ட்ரோன் பயன்பாட்டை இந்த நாடுகள் ஊக்குவித்து வருகின்றன.
இந்நிலையில், வேளாண் துறையில் ட்ரான் பயன்பாடு தொடர்பான பயிற்சியை தாட்கோ நிறுவனம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சென்னை தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து இலவசமாக வழங்க முன்வந்துள்ளது. ஆர்வமுள்ள பட்டியல்/பழங்குடியின மாணவர்கள் இந்த பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்.
அடிப்படைத் தகுதிகள்:
ஆதிதிராவிடர்/பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த ஆண்கள்/பெண்கள்/திருநங்கைகள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதி: குறைந்தது 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இந்தியர் என்பதற்கான அடையாளச் சான்று வேண்டும்.
பயிற்சி வகுப்புகள்:
10 நாட்கள் ட்ரோன் திறன் பயிற்சி வழங்கப்படும்.
ரூ. 61,100 பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும்.
தங்கும் வசதி அமைத்துக் கொடுக்கப்படும்.
ரூ. 2.25 லட்சம் வரை கடன் உதவி:
பயிற்சி காலத்திற்குப் பிறகு, சிவில் விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனரகம் மூலம் ட்ரோன்கள் இயக்குவதற்கான உரிமம் வழங்கப்படும். இந்த உரிமங்கள் 10 ஆண்டு காலம் செல்லுபடியாகும்.
பயிற்சியை முடித்தவர்கள், சொந்தமாகவோ அல்லது வங்கி கடன் மூலமாகவே ட்ரோன்கள் வாங்க தாட்கோ உதவி செய்யும்.உழவன் செயலி மூலம் தங்கள் சேவையை சந்தைப்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாக்க தரப்படும். எனவே, ஆர்வமுள்ளவர்கள், தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entrepreneurship