முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்... தொழிலாளர் ஆணையர் அறிவிப்பு

தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்... தொழிலாளர் ஆணையர் அறிவிப்பு

காட்சிப்படம்

காட்சிப்படம்

தொழில் நல்லுறவை ஊக்குவிக்கும் விதமாக“தொழில் நல்லுறவு விருதுக்கு” இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வெ.கணேசன் அறிவுறுத்தலின் படியும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசீமுத்தீன் ஆலோசனையின் படியும் ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். மாரிமுத்து தலைமையில் தொழில் நல்லுறவு பரிசுக் குழு (Good Industrial Relations Award Committee) அமைக்கப்பட்டுள்ளது.

வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு “தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை” ஏற்படுத்தி உள்ளது.

நல்ல தொழில் உறவினை பேணிப் பாதுகாக்கும், வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020 –ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட இம்முத்தரப்புக்குழு தேர்ந்தெடுக்கும்.

இவ்விருதுக்குரிய விண்ணப்பப்படிவங்களை தொழிலாளர் துறையின் வலைத்தளத்திலிருந்து http://www.labour.tn.gov.in பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து சென்னை, தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு 31.03.2023-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

Also Read : 100 நாள் வேலை திட்டத்தில் சேர யாருக்கெல்லாம் தகுதி? சம்பளம் எப்போ கிரெடிட் ஆகும்?

ஒவ்வொரு விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பித்தவர் தொழிற்சங்கமானால் ரூ.100/-ம், வேலையளிப்பவரானால் ரூ.250/-ம் கருவூல வலைத்தளத்தில் https://www.karuvoolam.tn.gov.in/challan/echallan மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு (challan) வைத்து அனுப்ப வேண்டும். e-challan செலுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் இத்துறையின் வலைத்தளத்தில் (http://www.labour.tn.gov.in) விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதன்மைச் செயலாளர்/தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: TN Govt