ஆன்லைனில் பொருட்களை வாங்குவது தற்காலத்தில் சாதாரணமான செயலாகி வருகிறது. கடைவீதிக்குச் சென்று ஆராய்ந்து துணி, பொருட்களை வாங்குவதற்குப் பதில் வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் மூலம் ஆன்லைனில் வாங்குவது எளிமையாகிவிட்டது. உள்ளங்கைக்குள் அடங்கும் ஒரு ஸ்மார்ட் போனில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற செயலிகள் மூலம் பொருட்களை இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் பெற முடிகிறது.
ஆன்லைனில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்களை வைத்துள்ளனர். ஆமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளங்களில் பொருட்களை வாங்குவது போலவே, உங்கள் பொருட்களை எளிமையான முறையில் விற்பனையும் செய்யலாம்.
ஆன்லைனில் தளத்தில் பொருட்களை விற்பனை செய்ய என்ன தேவை?
ஆன்லைனில் தளங்களில் விற்பனையாளராகப் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்வது எளிமையான காரியமே. உங்களிடம் GST எண், PAN கார்ட் எண், வங்கிக் கணக்கு மற்றும் தொலைபேசி எண் மட்டும் தேவை.
அமேசான் என்றால் https://sell.amazon.in/ மற்றும் பிளிப்கார்ட் என்றால் https://seller.flipkart.com/ என்ற இணையத்தளத்தில் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைனில் எந்தெந்த பொருட்களை விற்பனை செய்யலாம்?
நீங்கள் வீட்டில் இருந்தபடி தயார் செய்யும் மெழுகுவத்தி, மாட்டுச் சாண வறட்டி முதல் பெரிய அளவில் வியாபாரம் செய்யும் துணிகள், வீட்டு உபயோகப் பொருட்கள்,மரச் சாமான்கள் போன்றவற்றை ஆன்லைனில் விற்கலாம்.
துணிகள், எலக்ட்ரானிக் செயலிகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பொம்மைகள், புத்தகங்கள், இசைக் கருவிகள், அழகு சாதன, சமையல் பொருட்கள் ஆகியவற்றை ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
ஆர்டர்கள் பெறுவது எப்படி?
நீங்கள் விற்க விரும்பும் பொருட்களை ஆன்லைனில் வகையைக் குறிப்பிட்டு விற்பனைக்குப் பட்டியலிட வேண்டும். அதனைத்தொடர்ந்து, உங்கள் பொருட்கள் மக்களுக்குக் காட்சியாகும். ஆர்டர் செய்தால் அதற்கான தகவல் உங்களுக்கு இமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
உங்களிடமிருந்து பொருட்கள் ஆர்டர் செய்தவருக்கு எப்படிச் செல்லும்?
ஆர்டர் பெற்றவுடன் குறிப்பிட்ட பொருளை டெலிவரிக்கு தயாராக வைத்துக்கொண்டால் போதும். நிறுவனத்தில் இருந்து உங்களிடம் பொருளைப் பெற்று ஆர்டர் செய்தவரிடம் சேர்த்து விடுவர்.
பொருளுக்கான பணத்தை யார் நிர்ணயிப்பது?
உங்களுடைய பொருள் என்பதால் நீங்கள் தான் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.
Also Read : ONGC நிறுவனத்தில் ரூ.1 லட்சம் வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
பணம் எப்படி வரும்?
அமேசானில் 15 நாட்களுக்கு ஒரு முறை உங்களுக்கு வங்கிக் கணக்கில் விற்பனையான பொருட்களுக்கான பணம் செலுத்தப்படும். பிளிப்கார்டில் 7 முதல் 15 நாட்களில் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
கமிஷன் உண்டா?
ஆம், நீங்கள் விற்பனை செய்த பொருட்களில் விலையில் குறிப்பிட்ட சதவீதம் கமிஷனாக நிறுவனங்கள் பெறுகின்றனர். கமிஷன் பணம் பிடித்த போக மீதம் பணம் உங்களுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
விற்பனையாளர் உதவி
விற்பனையாளர்களின் பொருட்கள் திரும்பிப் பெறப்படும் போது அதில் சேதம் இருந்தால், விற்பனையாளர் சரியான ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கும் போது அதற்கான இழப்பு தொகையை நிறுவனம் வழங்கும். அதே போல் விற்பனையாளருக்குத் தேவையான சேவைகளை விற்பனையாளர் உதவி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
வியாபார வளர்ச்சியை தெரிந்துகொள்ளுவது எப்படி?
விற்பனையாளர்கள் போன் செயலி / கணினி மூலம் ஆர்டர்கள், பெற்ற பண விவரங்கள் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.