தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நடைபெறும் வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கும் (Agricultural Machinery-Repair and Maintenance Service) பயிற்சிக்குத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரதீப் குமார் தெரிவித்தாா்.
இதுகுறித்து,அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் “வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு சேவை வழங்குனர்" என்ற பயிற்சி திருச்சி உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை, அரசு இயந்திர கலப்பை பணிமனை திருச்சிராப்பள்ளியில் நடைபெற உள்ளதுஇந்த பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயது உடைய எஸ்.எஸ்.எல்.சி, ஐ.டி.ஐ, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு பயின்ற ஊரக இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பயிற்சியில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் அலுவலகம், அரசு இயந்திரக் கலப்பை பணிமனை, வேளாண்மை பொறியியல் துறை, எண் : 20 வ.உ.சி சாலை, கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி - 620001 என்ற முகவரிக்கு வந்து பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, கல்வித் தகுதி சான்றிதழ். வங்கி கணக்கு ஆகியவற்றின் நகல் உள்ளிட்ட விபரங்களுடன் நேரில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது www.tnskill.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
மேலும் தொடர்புக்கு 97915-40901, 98424-76576, 80568-41434. என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தேவையான விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.