ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சென்னையில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.90,000 வரை நிதியுதவி - தாட்கோ முக்கிய அறிவிப்பு

சென்னையில் ஆவின் பாலகம் அமைக்க ரூ.90,000 வரை நிதியுதவி - தாட்கோ முக்கிய அறிவிப்பு

ஆவின் பாலகம்

ஆவின் பாலகம்

TAHDCO AAVIN PALAKAM: ஆதி திராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் சென்னையில் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] |

  TAHDCO AAVIN PALAKAM: சென்னையில் ஆவின் பாலகம்  அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தாட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

  யார் விண்ணப்பிக்கலாம்ஆதி திராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்
  என்ன நிதியுதவிசென்னையில் ஆவின் பாலகம் அமைக்க தாட்கோ  மூலம் மின் வாகனம் (E- vehicle),உறைவிப்பான் (Freezer),குளிர்விப்பான் (Cooler) போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ரூ.3 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 30% மானியமாக ரூ.90,000 வழங்கப்படும்
  நிபந்தனைகள்அரசாணை நிலை எண் :95ல் உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடை அமைத்து ஆவின் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும்
  வயது வரம்பு18 முதல் 65 வயது வரை
  வருமான வரம்புஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
  விண்ணப்பம் செய்வது எப்படிஆதிதிராவிடர் http://application.tahdco.com/ என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் http://fast.tahdco.com/ என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.

  மேற்காணும் ஒப்பந்த நகலுடன், குடும்ப அட்டை அல்லது இருப்பிட சான்று (Smart Card), சாதி சான்றிதழ் (Community Certificate), வருமானச் சான்றிதழ் (ஓராண்டுக்குள் பெற்றிருக்க வேண்டும்) ஆதார் அட்டை / வாக்காளர் அடையாள அட்டை (Adhaar Card / Voters ID)இ- விலைப்புள்ளி GSTIN எண்ணுடன் (Quotation with GSTIN No.)இ திட்ட அறிக்கை (Project Report) இ-பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (Photo)கல்வித் தகுதி சான்றிதழ் (TC Xerox) விண்ணப்பதாரர் கடன் கோரும் தொழிலில் முன்அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.(Experience Certificate), வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்கம் (Bank pass Book first page) ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

  இதையும் வாசிக்கசிறுபான்மையினருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் கடன் உதவி திட்டங்கள் குறித்து தெரியுமா?

  மேலும், விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகலாம். தொலைபேசி எண். 044-25246344, கைபேசி எண்: 9445029456 ஆகும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Aavin, Entrepreneurship