முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / 2 நாள் அரசின் இலவச இணையவழி பயிற்சி..! - தொழில்முனைவோர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

2 நாள் அரசின் இலவச இணையவழி பயிற்சி..! - தொழில்முனைவோர்களே இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!

காட்சிப்படம்

காட்சிப்படம்

Export Import Logistics and Supply Chain Management : ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்த 2 நாட்கள் இணையவழி கருத்தரங்கத்திற்கு தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து கொண்டு வருகின்றன. எனவே ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் பந்தாக்க நிறுவனம், ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் குறித்த இணையவழி கருத்தரங்கம் (2 நாட்கள்) பயிற்சியினை வரும் 23.02-2023 தேதி முதல் 24.02.2023-ம் தேதி வரை (மதியம் 2:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) வழங்க உள்ளது.

இப்பயிற்சியில் ஏற்றுமதி இறக்குமதி தளவாடங்கள் கையாளுதல் முறைகள், பல்வேறு வகையான போக்குவரத்துக்கள், பலதரப்பட்ட போக்குவரத்து மாதிரி அமைப்புக்கள், குறித்த அறிமுகங்கள், சுங்கத்துறை முகவர்களின் பணிகள், சரக்கு அனுப்புபவர்கள், கப்பல் முகவர்கள், விமான சரக்கு முகவர்கள், கப்பல் அல்லாத சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள், கொள்கலன் சரக்கு நிலையம், உள்நாட்டு கொள்கலன் டிப்போக்கள் நடத்துபவர்கள், சரக்கு வகைகள், தட்டுப்படுத்தல், கொள்கலன்மயமாக்கல் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம்.

தொடர்ந்து, முழு கொள்கலத்தினை / குறைந்த கொள்கலன் ஏற்றுமதி, கப்பல் மற்றும் விமான சரக்கு செயல்பாடுகள், கப்பல் போக்குவரத்து வகைகள், சர்வதேச வர்த்தக விதிமுறைகள் 2020, கப்பல் ஏற்றுமதி ஒப்பந்த சீட்டு, விமான வழி ரசீது மற்றும் முக்கிய சேவைகள் மற்றும் உபகரணங்களை வழங்கும் செயல்முறை சுங்க அனுமதி நடைமுறை அறிமுகம், சுங்க பிணைக்கப்பட்ட கிடங்குகள் மற்றும் அனுமதிக்கு தேவையான ஆவணங்கள் போன்ற ஏற்றுமதிக்கான பல்வேறு செயல்பாடுகள் குறித்த பயிற்சிகள் நடத்தப்படுகிறது.

Also Read : மாதம் ரூ.60,000 ஊதியம்: திருப்பூர் மாவட்ட மருத்துவமனையில் வேலை

ஏற்றுமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் இப்பயிற்சியில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் http://www.editn.in/ என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கு முன்பதிவு செய்வது அவசியமாக உள்ளது.

தொடர்புக்கு :

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032.

தொலைப்பேசி எண்கள் : 44-22252081/22252082 9677152265, 866810260.

First published:

Tags: Business, Chennai, Entrepreneurship, Training