ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சுயதொழலில் தொடங்குவது உங்கள் கனவா..? இந்த செய்தி உங்களுக்கு தான்

சுயதொழலில் தொடங்குவது உங்கள் கனவா..? இந்த செய்தி உங்களுக்கு தான்

காட்சிப்படம்

காட்சிப்படம்

சென்னையில் சுயதொழில் தொடங்க விரும்பும் நபர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மூலம் நடத்தப்படும் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் 19.01.2023 அன்று சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் நடைபெறவுள்ளது.

மேற்கண்ட முகாம் காலை 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சுயமாகத் தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலைத் தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களுக்கு அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து, நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.

மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். எனவே, அரசுத் திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் இம்முகாம் மூலம் விளக்கப்படும்.

மேலும் இம்முகாம் குறித்த தகவல்களுக்குத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் தொலைப்பேசி மற்றும் கைப்பேசி எண்கள் 044-22252081, 22252082, 96771 52265, 8668102600 தொடர்பு கொள்ளலாம்.

First published:

Tags: Business, Business Idea, Entrepreneurship