சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் (chennai - Entrepreneurship Development and Innovation Institute) தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நாளை மறுநாள் (31.01.2023 அன்று) நடை பெறவுள்ளது.
மேற்கண்ட முகாம் காலை 12.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும். சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். முதற் கட்டமாக, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கயிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.
அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள. கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். எனவே, அரசுத் திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள்: 044-22252081, 22252082, 9677152265, 8668102600 ஆகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entrepreneurship