சென்னையில் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் 15.02.2023 ஆம் நாள் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலையில் 9.30 மணிக்குத் தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயமாகத் தொழில் தொடங்க விரும்பும் 18 வயது நிறைவு செய்த அனைவரும் இந்த முகாமில் கலந்துகொள்ளலாம். முதற்கட்ட முகாமில், சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலைத் தெரிவு செய்து எப்படி தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இறுதியில் பயிற்சியைத் தொடங்க ஆர்வமுள்ளவர்களின் பெயர் பெறப்பட்டு அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.
மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தித் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த முகாம் குறித்த விவரங்களுக்குத் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் தொலைப்பேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
தொலைப்பேசி எண்கள் : 044 - 22252081, 22252082, 96771 52265, 8668102600.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Business Idea, Employment camp, Entrepreneurship