சென்னை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர், தமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கூடன் திட்டம், கைவினை கலைஞர்களுக்கு கடன் திட்டம் ஆகியவற்றின் கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாட்கோ மூலம் செயல்படுத்தும் கடனுதவித் திட்டங்கள் விவரங்கள் பின்வருமாறு:
தனிநபர் காலக்கடன் திட்டம் (Individual Term loan Scheme):
சுயமாக தொழில் தொடங்க/வியாபாரம் மேற்கொள்ள விரும்பும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
கடன் தொகை | வட்டி விகிதம் | ஆண்டு வருமான உச்ச வரம்பு |
திட்டம் 1: ரூ.20 லட்சம் வரையிலான கடன்களுக்கு | 6% | கிராமப்புறங்களுக்கு - ரூ.98,000நகர்ப்புறங்களுக்கு - ரூ.1.20 லட்சம் ரூபாய் |
திட்டம் 1: ரூ.30 லட்சம் வரையிலான கடன்களுக்கு | ஆண் 8%பெண் 6% | திட்டம் 1-ன் கீழ் பயன்பெறமுடியாத நபர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை கொண்டவர்கள் |
கைவினை கலைஞர் திட்டம்:
சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த கைவினை கலைஞர்கள் குறைந்த வட்டி விகிதத்தில், மூலப்பொருட்கள்/உபகரணங்கள்/இயந்திரங்கள்/கருவிகள் வாங்குவதற்கு இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கப்படுகிறது.
கடன் தொகை | வட்டி விகிதம் | ஆண்டு வருமானம் உச்சவரம்பு |
ரூ.10 லட்சம் வரை | ஆண் - 5%பெண் - 4% | கிராமப்புறங்களுக்கு - ரூ.98,000நகர்ப்புறங்களுக்கு - ரூ.1.20 லட்சம் ரூபாய் |
சிறுபான்மையினர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் உதவித் திட்டம்:
ஆண் மற்றும் பெண் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பலகாரக்கடை, காலணி விற்பனை செய்தல், சிற்றுண்டி, ஜவுளி வியாபாரம், ஊறுகாய் மற்றும் அப்பளம் தயாரித்து விற்பனை செய்தல், கூடை பின்னுதல் போன்ற சிறு வியாபாரம் செய்து தங்களின் பொருளாதாரத்தினை உயர்த்திட, சிறுகடன் வழங்கும் திட்டம் மூலம் பின்வருமாறு கடன் வழங்கப்படுகிறது
கடன் தொகை | வட்டி விகிதம் | ஆண்டு வருமான உச்ச வரம்பு |
திட்டம் 1: ரூ.1 லட்சம் வரையிலான கடன்களுக்கு | 7% | கிராமப்புறங்களுக்கு - ரூ.98,000நகர்ப்புறங்களுக்கு - ரூ.1.20 லட்சம் ரூபாய் |
திட்டம் 1: ரூ.1.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு | ஆண் -10%பெண் -8% | திட்டம் 1-ன் கீழ் பயன்பெறமுடியாத நபர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை கொண்டவர்கள் |
மேலும் சிறுபான்மையின மாணவ/மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை/முதுகலை தொழிற்கல்வி/தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3% வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலான கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.
தேவைப்படும் ஆவணங்கள்: கடன் மனுக்களுடன், சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை, ஒட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்விக் கடன்: கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது / செலான் (original) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, சென்னை மாவட்டத்தில் வசிக்கும் (கிறித்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த, பார்சி, சமணர் மற்றும் ஜெயின்) ஆகிய சிறுபான்மையினர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கிக் கிளைகளிலும் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தங்களுக்கு அருகாமையில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளில் ஒப்படைத்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Entrepreneurship