முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு…

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு…

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க விரும்பும் நபர்கள் 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

  • Last Updated :

தமிழகத்தில் 2014-ம் ஆண்டில் இருந்து வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அதை புதுப்பிக்க 3 மாத கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களில் 2014, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை மற்றும், 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பிற்கான பதிவை புதுப்பிக்க கடந்த மே மாத அரசாணையில் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிந்துள்ள நிலையில், மேலும் 3 மாதங்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சலுகையை பெற விரும்பும் நபர்கள் அரசாணை வெளியிடப்படும் நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் விடுபட்ட பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். 3 மாதங்களுக்கு பின்பு பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். 1.1.2014 தேதிக்கு முன்பு புதுப்பிக்கத் தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: TNPSC: பிப்ரவரியில் குரூப் 2, மார்ச்சில் குரூப்-4 தேர்வு அறிவிப்பு

வேலைவாய்ப்பு அட்டையை புதுப்பிக்க தவறியவர்கள் 01.03.2022-க்குள், https://tnvelaivaaippu.gov.in  என்ற இணையதளத்தின் வாயிலாகவோ அல்லது வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ நேரில் சென்று பதிவு செய்து புதுப்பித்துக்கொள்ளலாம்.

top videos
    First published:

    Tags: Employment and training department, Employment news, Employment Office, Job