சென்னையில் ஜூன் 1ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

news18
Updated: May 29, 2018, 6:40 PM IST
சென்னையில் ஜூன் 1ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
கோப்புப் படம்
news18
Updated: May 29, 2018, 6:40 PM IST
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் முதல் தேதி நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக, சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார் துறையில் பணியமர்த்தம் செய்வதற்காக வரும் 01.06.2018 அன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளோமா, பட்டப்படிப்பு படித்தவர்கள் பங்கேற்கலாம்.

வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் தங்களது கல்விச்சான்றுகள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அன்றைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும்.

இப்பணியமர்த்தல் சேவையானது முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. எனவே, இதில் கலந்துகொள்ள விரும்புவோர் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
First published: May 29, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...