டாடா நிறுவனம் பெண்களுக்கான வேலையையும் மேற்படிப்பிற்கான வாய்ப்பு அளித்து வேலைவாய்ப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இந்த வேலைக்கான முன்பதிவு விவரங்கள் மற்றும் முழு தகவலைக் கீழ் வருமாறு தெரிந்துக்கொள்ளங்கள்.
வேலை விவரங்கள்:
பணியிடம் : இளநிலை தொழில் நிபுணர்கள்.
தகுதி : 18 வயதிலிருந்து 20 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும்.
படிப்பு : +2 (பன்னிரெண்டாம் வகுப்பு 2021,2022ல் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே)
தொடக்கநிலை சம்பளம் : மாதாந்திர மொத்த சம்பளம் (CTC) 16.557/- மற்றும் போனஸ்.
உயரம் மற்றும் எடை : 145 செ.மீ, 43 கிலோ ( குறைந்தபட்சம்) முதல் 65 கிலோ வரை (அதிகபட்சம்).
வேலைக்கான பயிற்சி:
தகுதியுள்ள விண்ணப்பதார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 12 நாள் தீவிர பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவர். இந்த அத்தியாவசியப் பயிற்சித் தொகுப்பை வெற்றிகரமாக முடித்து பயிற்சியாளர்களுக்கு வேலை வாய்ப்பு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும்.
மேற்படிப்பிற்கான வாய்ப்பு:
TEPL நிறுவனத்தின் ஒரு வருட அனுபவத்திற்குப் பிறகு இளநிலை தயாரிப்பியல் பட்டப்படிப்பில் சேரும் வாய்ப்பு.
பணியாளர்க்கான நலத்திட்டங்கள்:
நிரந்தர வேலை வாய்ப்பு, வேறு ஒப்பந்தமோ, பத்திரமோ இல்லை
நம்பிக்கைக்குதகுந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல்
தேவையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள்.
ஒழுங்குமுறை சட்டங்களுக்குட்பட்ட அனைத்து நலத்திட்டங்கள் (PF/ Gratuity/ESI போன்றவை)
கற்றுக்கொள்வதற்கான வியத்தகு சூழல்:
விரைந்து மாறி வரும் தொழில் உலகில் பணியாற்றும் பொழுதே வெவ்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வாழ்கையில் முன்னேற வாய்ப்பு, புதுமை மிகு இயந்திரங்களை இயக்கும் வாய்ப்பு, மெய் நிகர் யதார்த்தத்தின் உதவியுடன் செயல்திறனை மெருகுட்டும் கல்வி தொகுதிகள்.
முன்பதிவு :
தமிழ்நாட்டில் பல இடங்களில் வேலைக்காக முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 14ம் தேதியில் தொடங்கி அடுத்த மாதம் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நேரம் :
குறிப்பிட்ட இடங்களில் ஒதுக்கப்பட்ட நாட்களில் காலை 8 மணி முதல் தொடங்கி காலை 10 மணி வரை நடைபெறவுள்ளது.
முன்பதிவு நடைப்பெறும் இடங்கள்:
கொண்டு செல்ல வேண்டியவை :
TC, 10 மற்றும் 12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசலை முன்பதிவு செய்யும் போது எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.