Home /News /employment /

டீச்சர் வேலை தேடுறீங்களா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு - டிகிரி போதும்

டீச்சர் வேலை தேடுறீங்களா? உங்களுக்கான அருமையான வாய்ப்பு - டிகிரி போதும்

ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

இளங்கலை அல்லது முதுகலைமுடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம். இந்தவேலைவாய்ப்பு முகாம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது.

    நாகர்கோவிலில் 17 /07 /2022 (ஞாயிற்று கிழமை) டதி (DUTHIE) மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கின்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ய இருக்கின்றார்கள் . இதில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் (அனுபவம் உள்ள /இல்லாதவர்கள் ) நேர்முகத் தேர்வுக்கு நேரில் வர இருக்கின்றார்கள் . இந்தவேலைவாய்ப்பு முகாம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் நடத்தப்படுகின்றது.

    யார் கலந்து கொள்ளலாம்?

    • இளங்கலை அல்லது முதுகலை முடித்த மாணவர்கள் கலந்துகொள்ளலாம்.

    • B.ed,M.ed,Mphil படித்து முடித்த மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

    • கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • நேர்முகத்தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல் சான்றிதழ்கள் கொண்டுவரவும்.

    • அனைத்து கல்வியியல் கல்லூரிகளும் அழைக்கப்பட்டுள்ளன ..

    • மேலும் நீங்களே ஏதாவதுஒரு topic தேர்ந்தெடுத்து படித்துவரவும் .DEMO CLASS எடுக்க தயாராக வரவும் .


    விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு :

    முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்துவிட்டு 17 .07 .2022 ஞாயிற்று கிழமை அன்று நேர்முகத்தேர்வுக்கு நேரில்வரவும்.

    ஏற்கெனெவே நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் முன்பதிவு செய்தவர்கள் மீண்டும் முன்பதிவு செய்யதேவை இல்லை.

    முன்பதிவு செய்ய இயலாதவர்கள் நேரில் வந்து பதிவு செய்து விட்டு நேர்முகத்தேர்வில் நேரடியாக கலந்து கொள்ளலாம் .

    முன்பதிவு செய்யும் வழிமுறைகள் :

    www.tnschoolteachers.com என்ற இணையத்தளத்தில் FOR TEACHERS----SIGNUP ---CLICK செய்து பதிவு செய்யவும்.

    மீண்டும் TEACHERS LOGIN கிளிக்செய்து உங்களது மொபைல் எண்ணையும், நீங்கள்கொடுத்த PASSWORD கொடுத்து LOGIN செய்யவும் .

    FILL YOUR COMPLETE DETAILS என்ற MENU வை கிளிக் செய்து உங்களது விபரங்களை பதிவு செய்யவும்.

    மேற்குறிப்பிட்ட (www.tnschoolteachers.com ) இணையத்தளத்தில் பதிவுசெய்துவிட்டு 17 .07.2022 ஞாயிற்று கிழமை அன்று நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும் .

    நேர்முகத்தேர்வுக்கு எடுத்து வரவேண்டியவை :

    1) நேர்முகத் தேர்வுக்கு வரும்போது உண்மை சான்றிதழ்கள் அல்லது நகல்சான்றிதழ்கள் ,

    2) PASSPORT SIZE PHOTO-1 மற்றும்

    3) விண்ணப்ப கட்டணம் 50/-

    தவறான தகவல்களை பதிவு செய்பவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    இடம்: DUTHIE HR SEC SCHOOL FOR GIRLS,COURT ROAD NEAR POTHYS, NAGARKOIL-1

    நாள் : 17 .07 .2022 (ஞாயிற்று கிழமை)

    நேரம் : காலை 9 மணிமுதல்மலை 4 மணிவரை
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி