சென்னை, கிண்டியில் இன்று (அக்டோபர் 26) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 500-க்கும் அதிகமான நபர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
யார் யார் பங்கேற்கலாம்? இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை முடித்த 35 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
இந்த முகாமில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. முகாமில் 500-க்கும் அதிகமான நபர்கள் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
மேலும், துபாயில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கான தேர்வும் வேலைவாய்ப்பு முகாமில் நடைபெற உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு 044 – 22501525, 22505002, 22505006 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Employment, Guindy industrial estate, Job Fair