சென்னையில் அக்டோபர் 5-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!

news18
Updated: October 3, 2018, 4:41 PM IST
சென்னையில் அக்டோபர் 5-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்!
மாதிரிப் படம்
news18
Updated: October 3, 2018, 4:41 PM IST
சென்னையில் நாளை மறுதினம் (அக்டோபர் 5) வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை கமிஷனர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் `வேலைவாய்ப்பு வெள்ளி’ என்ற சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதன்படி சென்னையில், நாளை மறுதினம் (அக்டோபர் 5) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இம்முகாம் கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். இவர்களுக்கான வயது வரம்பு 35 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு 044 – 22501525, 22505002, 22505006 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.
First published: October 3, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...