• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • TNHRCE Recruitment 2021 : கோவிலில் பணியாற்ற விருப்பமா? இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

TNHRCE Recruitment 2021 : கோவிலில் பணியாற்ற விருப்பமா? இந்து சமய அறநிலையத்துறையில் வேலை

இந்து சமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை

20.09.2021 மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் தேவையான விபரங்கள் மற்றும் இணைப்புகளுடன் வரப்பெறாத விண்ணப்பங்களும் வேறு வகையில் உருவாக்கப்பட்ட விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

  • Share this:
    சென்னை,3 தங்கசாலை தெரு, சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் கீழ்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தக்கார் தீர்மானத்தின் படி பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 20.09.2021ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் : 

     































































    பணியின் பெயர் பணியிடங்கள் எண்ணிக்கை

    சம்பள விகிதம்

    01.01.2019ல்
    கல்வித்தகுதிகள்
     தட்டச்சர்  1  ரூ.15,300/- (ஊதிய அட்டவணை எண் 15)

     பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி மற்றும் அரசு தொழில் நுட்ப தட்டச்சர் தேர்வில் தட்டச்சு தேர்வு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

    1. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை (அல்லது)

    2. தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (அல்லது)

    3. ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை ஆனால், இனம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியை விண்ணப்பதாரர் பெறாத இனம் 2 அல்லது இனம் 3ல் உள்ள தகுதிகளை பெற்ற விண்ணப்பதாரர்கள் மேற்சொன்ன முன்னுரிமை வரிசையில் நியமிக்கப்படலாம். கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
     அர்ச்சகர்  1  ரூ.11,600/- (ஊதிய அட்டவணை எண் 12)  தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.ஆகம பள்ளி அல்லது வேதபாட சாலையில் தொடர்புடைய துறையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
     பரிசாரகர்  1  ரூ.13,200/- (ஊதிய அட்டவணை எண் 14)

    பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

    தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    பூஜை மற்றும் சடங்குகள் நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகள் அறிந்திருக்க வேண்டும். கோவிலின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நைவேத்தியம் மற்றும் பிரசாதம் தெரிந்திருக்க வேண்டும்.
     மேளம் செட்  1  ரூ.15,300/- (ஊதிய அட்டவணை எண் 15)

     தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    அரசால் அங்கீகரிக்கப்பட்ட இசை பள்ளியில் இருந்து தொடர்புடைய துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
     காவலர்  1   ரூ.11,600/- (ஊதிய அட்டவணை எண் 12)  தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
     இரவு காவலர்  1   ரூ.11,600/- (ஊதிய அட்டவணை எண் 12)  தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
      திருவலகு  1   ரூ.10,000/- (ஊதிய அட்டவணை எண் 10)  தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
     கால்நடை பராமரிப்பாளர்  1    ரூ.11,600/- (ஊதிய அட்டவணை எண் 12)  தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
      ஓதுவார்  1    ரூ.12,600/- (ஊதிய அட்டவணை எண் 13)

     தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

    மற்றும் சமய நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் தேவார பாடசாலையில் இது தொடர்புடைய துறையில் குறைந்த பட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    2021 ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும் 35 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். இதர விபரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் வந்து ரூ.100/- செலுத்தி பெற்றுக்கொள்ள வேண்டும்.

    விண்ணப்பங்களை 20.08.2021 முதல் 20.09.2021 மாலை 5 மணி வரையில் பெற்றுக்கொள்ளலாம். படிவங்களை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை அரசு பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பதுடன் இணைத்து விண்ணப்பங்களை செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சென்னை - 3 என்ற முகவரியில் சேர்ப்பிக்க வேண்டும்.

    20.09.2021 மாலை 5.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் தேவையான விபரங்கள் மற்றும் இணைப்புகளுடன் வரப்பெறாத விண்ணப்பங்களும் வேறு வகையில் உருவாக்கப்பட்ட விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக்கொள்ள படுகின்றது.

    அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: