தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மருத்துவப் பணிகளில் அடங்கிய உளவியல் உதவிப் பேராசிரியர் உடன் கடந்த மருத்துவ உளவியலாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி நியமன அறிவிப்பு 15.11.2022 ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தற்போது கல்வித்தகுதியை மாற்றி மீண்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இப்பணிக்கு விண்ணப்பிக்க 14.12.2022 உடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் புதிய கல்வித்தகுதியுடன் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட புதிய கல்வித் தகுதியில் முழு விவரங்கள் கீழ் வருமாறு :-
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
உளவியல் உதவிப் பேராசிரியர் உடன் கலந்த மருத்துவ உளவியலாளர் பணி | 24 | ரூ.56,100-2,05,700/- |
முந்தைய கல்வித்தகுதி:
திருத்தி அமைக்கப்பட்ட கல்வித்தகுதி:
முக்கிய நாட்கள் :
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 20.01.2023
விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய : 25.01.2023 - 27.01.2023.
Also Read : சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு : ரூ.30,000 சம்பளம்
குறிப்பு :
இப்பணிகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் தற்போது வெளியாகியுள்ள புதிய கல்வித்தகுதிக்குத் தகுந்தவராக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுந்தவர்கள் அல்ல. பழைய விண்ணப்ப லிங்க் அகற்றப்பட்டுள்ளது. புதிய லிங்கில் தகுந்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையில் மாற்றம் இல்லை. கல்வித்தகுதியைத் தவிர முந்தைய அறிவிப்பில் வேறு மாற்றம் இல்லை.
புதிய அறிவிப்பு : கல்வித்தகுதி மாற்றம்
பழைய அறிவிப்பு : பணி அறிவிப்பு.
மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தை காணவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Nadu Government Jobs, TNPSC