சென்னையில் நவ.27 முதல் 29 வரை ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான 3 நாள் பயிற்சி

பயிற்சியில்   சேர விரும்புவோர் தங்கள் பெயரை நேரிலோ அல்லது தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

Web Desk | news18
Updated: November 14, 2018, 9:09 PM IST
சென்னையில் நவ.27 முதல் 29 வரை ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான 3 நாள் பயிற்சி
ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பாக பயிற்சி
Web Desk | news18
Updated: November 14, 2018, 9:09 PM IST
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான வழிமுறைகள், சட்டதிட்டங்கள் குறித்த 3 நாள் பயிற்சி சென்னையில் வரும் 27 முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உலகமயமாக்கலின் விளைவாக ஏற்றுமதி வர்த்தகத்திற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்பயிற்சியில் ஏற்றுமதி சந்தையின் தேவை, கொள்முதலுக்கான வாய்ப்புக்கள், பொருட்களை பதப்படுத்துதல், சீரிய முறையில் பேக்கிங் செய்தல், ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்கள், வங்கி நடைமுறைகள், அந்நிய செலாவணியின் மாற்று விகிதங்கள், காப்பீடு குறித்த தகவல்கள், ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள், இறக்குமதிக்கான சுங்கவரி கணக்கிடல் போன்றவை பயிற்றுவிக்கப்படும்.

மேலும், இப்பயிற்சியில் ஏற்றுமதியாளர்களுக்கான ஊக்க உதவி பற்றியும், அவற்றைப் பெறும் வழிமுறைகளைப் பற்றியும் ஆலோசனை வழங்கப்படும். மேலும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்தும் விளக்கப்படும்.

ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில் துவங்க விரும்பும் அல்லது தற்போது உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் 18 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் /  பெண் இருபாலரும் சேரலாம்.

பயிற்சி நடைபெறும் இடம்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை- 600 032.

இப்பயிற்சியில்   சேர    விரும்புவோர் தங்கள் பெயரை நேரிலோ அல்லது தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இணையதளம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் - 044-22252081 /  22252082, 8668102600. மேலும் www.editn.in என்ற வலைதளத்தை பார்க்கவும்.

Also watch

First published: November 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...