Home /News /employment /

ECIL Tradesman Recruitment: இந்திய மின்னணு கழகத்தில் 40 காலியிடங்கள், ஐடிஐ மாணவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு

ECIL Tradesman Recruitment: இந்திய மின்னணு கழகத்தில் 40 காலியிடங்கள், ஐடிஐ மாணவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

மாதம் ஒன்றுக்கு தோராயமாக ரூபாய் 20480 வழங்கப்படும். ஆண்டுக்கு 3% சம்பள உயர்வு இருக்கும்.

    எலக்ட்ரானிக் மெக்கானிக், பிட்டர், எலக்ட்ரீசியன்,  மெஷினிஸ்ட் உள்ளிட்ட தொழில் பிரிவுகளில் பணி செய்வதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய மின்னணு கழகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    காலியிடங்கள்: 40























    எலக்ட்ரானிக் மெக்கானிக்11
    பிட்டர்12
    எலக்ட்ரீசியன்3
    மெஷினிஸ்ட்10
    கடையுநர் (டர்னர்)4

     

    முக்கியமான நாட்கள்:  தற்போது, விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 25.06.2022 ஆகும்.

    தெரிவு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் (Written test) மூலமும், தொழிற் பிரிவு (Trade Test)  தேர்வின் மூலமும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். நேர்காணல் தேர்வு நடைபெறாது.

    எழுத்துத் தேர்வில் பொது அறிவு குறித்த  கேள்விகள் இடம்பெற்றிருக்கும். புறநிலை வகையில் பல்வேறு விடைகளிலிருந்து தெரிவுசெய்யும் வினாக்களாக அமையும்.

    கல்வித் தகுதி: அனைத்து பணிகளுக்கும் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். மேலும், தொடர்புடைய துறைகளில்  தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    சம்பளம்:  மாதம் ஒன்றுக்கு தோராயமாக ரூபாய் 20480 வழங்கப்படும். ஆண்டுக்கு 3% சம்பள உயர்வு இருக்கும். மருத்துவ விடுப்பு, காப்பீடு, வாய்ப்பு நிதி, பணிக்கொடை போன்ற இதர வசதிகளும் வழங்கப்படும்.

    இடஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனங்கள் நடைபெறும். எனவே, தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து இடஒதுக்கீடு வசதிகளைப் பெறலாம்.

    வயது வரம்பு:   இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின்  அதிகபட்ச வயது 28 ஆக நிர்ணயிக்கப்பட்டுட்டள்ளது. இருப்பினும், பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள்/ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  ஆகியோருக்கு அதிகபட்ச வயதுவரம்பில்  தளர்வு இருக்கும்.

    விண்ணப்பம் செய்வது எப்படி: விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே பெறப்படும். http://careers.ecil.co.in என்ற இணைய பக்கத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

    வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவைஆட்சேர்ப்பு அறிவிப்பில் (ELECTRONICS CORPORATION OF INDIA LIMITED) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

    விண்ணப்பிக் கட்டணம்: இதற்கான, விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் , நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோர்    தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மட்டும்  ரூ.500 செலுத்த வேண்டும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Government jobs, Job

    அடுத்த செய்தி