ரயில்வே துறை உடன் இணைந்து பிஸ்னஸ் செய்து மாதம் ரூ.80,000 சம்பாதிப்பது எப்படி?

Web Desk | news18
Updated: July 19, 2019, 10:53 PM IST
ரயில்வே துறை உடன் இணைந்து பிஸ்னஸ் செய்து மாதம் ரூ.80,000 சம்பாதிப்பது எப்படி?
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: July 19, 2019, 10:53 PM IST
ரயில்வேதுறை உடன் இணைந்து டிக்கெட் விற்பனை செய்வதன் மூலம் மாதம் 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

இந்தியன் ரயில்வேஸ் கீழ் செயல்பட்டு வரும் ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் புக்கிங் ஏஜெண்ட் ஃபிரான்ச்சிஸ் சேவைகளை வழங்குகிறது.

இதன் மூலம் ஐஆர்சிடிசி ஏஜெண்ட் உரிமையைப் பெறுபவர்கள் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட் சேவை வழங்கி அதில் கமிஷன் தொகையைப் பெற முடியும்.

ரயில் டிராவல் சர்வீஸ் ஏஜெண்ட் என அழைக்கப்படும் இந்த உரிமையைப் பெற ஐஆர்சிடிசிக்கு ஒரு முறை கட்டணமாக 20,000 ரூபாயை செலுத்த வேண்டும். அதில் 5,000 ரூபாய் திருப்பி அளிக்கக் கூடிய டெபாசிட்டாக இருக்கும். இந்த சேவையைத் தொடர்ந்து வழங்க ஆண்டுக்கு 5,000 ரூபாயை கட்டணமாக ஐஆர்சிடிசிக்கு செலுத்த வேண்டும்.

ஐஆர்சிடிசி ஏஜெண்ட் உரிமையை பெறுவது எப்படி?


ஐஆர்சிடிசி ஏஜெண்ட்டாக இணைய விரும்புபவர்கள் 100 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் மூலம் ஒப்பந்தம் போடப்படும். டிமாண்ட் டிராஃப்ட் மூலம் 20,000 ரூபாய் ஒரு முறை பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பம், பான் கார்டு, வருமான வரி தாக்கல் விவரங்கள், முகவரி சான்றிதழ் போன்ற விவரங்களை ஐஆர்சிடிசிக்கு செலுத்துவதன் மூலம் எளிதாக ஏஜெண்ட்டாக மாறிவிடலாம்.

கமிஷன் விகிதங்கள்:


ஐஆர்சிடிசி ஏஜெண்ட்டான பிறகு ஸ்லீப்பர் டிக்கெட் புக் செய்தால் 30 ரூபாயும், ஏசி டிக்கெட் என்றால் 60 ரூபாயும் கமிஷன் கிடைக்கும். குறைந்தது 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை ரயில் டிக்கெட்களுக்கு கமிஷன் வழங்கப்படும்.

மேலும் ரயில்வே ஓய்வு அறை, விமான டிக்கெட் போன்றவற்றையும் ஐஆர்சிடிசி ஏஜெண்ட்களால் வாடிக்கையாளர்களுக்கு புக் செய்து வழங்க முடியும்.

மேலும் பார்க்க:
First published: July 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...