Home /News /employment /

மின்-மாவட்ட மேலாளர் வேலை.. கோவை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

மின்-மாவட்ட மேலாளர் வேலை.. கோவை மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலை

வேலை

job vacancy : கோயம்புத்தூர் மாவட்ட மின்-மாவட்ட மேலாளர் (1) காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    கோயம்புத்தூர் மாவட்ட மின் ஆளுமை சங்கத்தின் கீழ் மின்-மாவட்ட மேலாளர் பணியிடத்திற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தை சார்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் / துறைகோயம்புத்தூர் மாவட்ட மின் ஆளுமை சங்கம்
    காலியாக உள்ள வேலையின் பெயர்மின்-மாவட்ட மேலாளர்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி05/07/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி20/07/2022
    வயது தகுதி21 to 35, as on 1st January 2022
    மொத்த காலிப்பணியிட விவரம்01
    விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய கடைசி நாள்20.07.2022
    ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள்30.07.2022
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    கோவை மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூ., இன்ஜி., தகவல் தொழில்நுட்பம்/ தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அல்லது மூன்றாண்டு இளங்கலை படிப்பு முடித்து, முதுகலை படிப்பில் எம்.சி.ஏ., எம்.எஸ்.சி., கம்ப்யூட்டர் அறிவியல், தகவல் தொழில்நுட்பம், சாப்ட்வேர் இன்ஜி., போன்ற படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். வேறு துறையில் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வில் பங்கேற்க முடியாது.

    விண்ணப்பதாரர் கண்டிப்பாக கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதற்கான, இருப்பிட சான்றிதழ் அல்லது பிறப்பிட சான்றிதழை இணைக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த இணைப்பில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் ,

    https://agaram.tn.gov.in/wlcopen/formpage_open.php?id=39-167

    https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/07/2022070635.pdf

    விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய இங்கே தொடரவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி