ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ரூ.71 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு

தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் ரூ.71 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தி- மக்கள் தொடர்புத் துறை

தமிழ்நாடு செய்தி- மக்கள் தொடர்புத் துறை

தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாகன ஓட்டுநர் பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளன.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
வாகன ஓட்டுநர்3ரூ.19,500-71,900/-

பணியமர்த்தப்படும் இடம்:

செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமையிடம், சென்னை -9 மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சென்னை - 113.

வயது வரம்பு :

01.07.2021 அன்றுள்ளவாறு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பி.சி மற்றும் எம்.பி.சி-க்கு 34 வயதாகவும், எஸ்.சி & எஸ்.டி-க்கு 37 வயதாகவும் உள்ளது.

கல்வித்தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் தேவை மற்றும் 5 வருட அனுபவம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சுயவிவரங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பப்படிவத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும். மனுதாரரின் பெயர். புகைப்படம், முகவரி, பிறந்த தேதி, கல்வி மற்றும் அனுபவம் போன்ற விவரங்கள் விண்ணப்பத்தில் இடம்பெற வேண்டும்.

Also Read : தமிழக அரசு நிறுவனத்தில் ரூ.83,000 சம்பளத்தில் வேலை : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. தகுதிகள் என்ன?

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :

இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,

நாமக்கல் கவிஞர் மாளிகை,

தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை,

சென்னை - 600009.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 02.01.2022 மாலை 5 மணி வரை.

First published:

Tags: Tamil Nadu Government Jobs