கடந்த ஜனவரி 24, திங்கட்கிழமை, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ (DRDO) ஆனது, ரிசர்ச் சென்டர் ஐமரத்திற்கான ( Research Centre Imarat - RCI) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு நடக்க தொடங்கி உள்ளதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இந்த ஆட்சேர்ப்பில் 150 அப்ரண்டிஸ் பணியிடங்கள் உள்ளன. இதன் கீழ் டிஆர்டிஓ ஆனது, பட்டதாரி நிலை அப்ரண்டிஸ், டிப்ளமோ நிலை தொழில்நுட்ப அப்ரண்டிஸ் மற்றும் வர்த்தக அப்ரண்டிஸ்களை (graduate level apprentice, diploma level technician apprentice, trade apprentice) பணியமர்த்தவுள்ளது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆர்சிஐ-யின் (RCI) அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். நினைவூட்டும் வண்ணம், குறிப்பிட்ட வேலைகள் சார்ந்த விண்ணப்பங்கள் ஜனவரி 25 முதலே திறக்கப்பட்டுள்ளது.
மேலும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 7, 2022 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதி, வயது வரம்பு மற்றும் ஆன்லைன் வழியாக எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.
இதையும் படியுங்கள் : பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை - இன்றே விண்ணப்பியுங்கள்
பணியிடங்களுக்கான தகுதி, விவரங்கள் மற்றும் தேர்வு செய்யப்படும் முறை:
மொத்தம் உள்ள 150 பணியிடங்களில் 40 இடங்கள் கிராஜுவேட் லெவல் அப்ரண்டிஸ், 60 இடங்கள் டெக்னீசியன் அப்ரண்டிஸ், 50 இடங்கள் டிரேட் அப்ரண்டிஸ்களுக்கானது ஆகும்.
வயது வரம்பு:
குறிப்பிட்ட டிஆர்டிஓ பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் ஜனவரி 1, 2022 அன்று 18 வயதுக்குக் குறைவாக இருக்கக்கூடாது. நீங்கள் இந்த வயதிற்கு மேல் இருந்தால், நீங்கள் மேற்க்குறிப்பிட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதி:
1. கிராஜுவேட் லெவல் அப்ரண்டிஸ்: இந்த விண்ணப்பதாரர்கள் [இசிஇ, இஇஇ, சிஎஸ்இ, மெக்கானிக்கல், கெமிக்கல்] ஆகியவற்றில் பி.இ / பி.டெக் அல்லது பி.காம் / பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
2. டெக்னீசியன் அப்ரண்டிஸ்: டெக்னீஷியன் அப்ரெண்டிஸ் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இசிஇ, இஇஇ, சிஎஸ்இ, மெக்கானிக்கல் அல்லது கெமிக்கல் ஆகியவற்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
இதையும் படியுங்கள் : போஸ்ட் ஆபிசில் காத்திருக்கும் வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்
3. டிரேட் அப்ரண்டிஸ்: இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் [ஃபிட்டர், டர்னர், எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் மற்றும் வெல்டர்] ஆகிய பாடங்களில் (NCVT / SCVT உடனான) ஐடிஐ-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மேலும் டிஆர்டிஓ அறிவிப்பின்படி, ஆவணங்களின் சரிபார்ப்புக்கு உட்பட்டு, தேவைக்கேற்ப கல்வித் தகுதி /எழுத்துத் தேர்வு / நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையிலே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
குறிப்பிட்ட வேலைகளுக்கு டிஆர்டிஓ இணையதளம் வழியாக விண்ணப்பிப்பது எப்படி?
01. வேலைக்காக விண்ணப்பிக்க, முதலில் https://rcilab.in என்கிற இணையதளத்திற்குச் செல்லவும்
02. ஹோம் பேஜிற்கு வந்ததும், ‘என்கேஜ்மென்ட் ஆஃப் அப்ரண்டிஸ் 2021-22' (Engagement of Apprentices - 2021-22) என்பதைக் கிளிக் செய்யவும்
இதையும் படியுங்கள் : ஏப்ரல் 2-வது வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு - 9,494 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு
03: இப்போது நீங்கள் ஒரு தனி பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு நீங்கள் போர்ட்டலில் பதிவு செய்யும்படி கேட்கப்படுவீர்கள்.
04. என்ஏபிஎஸ் (NAPS) போர்ட்டலில் உங்கள் ரிஜிஸ்டர் நம்பரை உள்ளிட்டு பின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு பதிவு செய்யவும்.
05. பதிவு செய்து முடித்ததும், முந்தைய பக்கத்திற்குச் சென்று, 'அப்ளை ஹியர்' (Apply Here) என்பதைக் கிளிக் செய்யவும்.
06. உங்கள் விண்ணப்பத்தை அணுக உங்கள் ரிஜிஸ்டர் எண் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.
07. நீங்கள் விண்ணப்பப் படிவத்தை அடைந்தவுடன், தேவையான அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்பவும்.
08. உங்கள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்தவுடன், அதைச் சமர்ப்பிக்கவும். இதன் பிறகு, அப்ளிகேஷனை பிரிண்ட் அவுட் எடுக்க ஸ்க்ரீனின் இடது பக்கத்தில் ஒரு விருப்பத்தைக் காண்பீர்கள். எதிர்கால தேவைக்காக விண்ணப்பத்தின் டிஜிட்டல் நகலை பிரிண்ட் செய்தோ அல்லது சேமித்து வைக்கவோ இதை பயன்படுத்தலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DRDO, Job Vacancy