மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) நிறுவனம் வெளியிட்ட 1061 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை இன்றுடன் (டிசம்பர் 07) முடிவடைகிறது. எனவே, ஆற்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்:
பணியின் பெயர் | காலிபணியிடங்கள் |
Junior Translation Officer (JTO) | 33 |
Stenographer Grade-I (English Typing) | 215 |
Stenographer Grade-II (English Typing) | 123 |
Administrative Assistant ‘A’(English Typing) | 250 |
Administrative Assistant ‘A’ (Hindi Typing) | 12 |
Store Assistant ‘A’ (English Typing) | 134 |
Store Assistant ‘A’ (Hindi Typing) | 4 |
Security Assistant ‘A’ | 41 |
Vehicle Operator ‘A’ | 145 |
Fire Engine Driver ‘A’ | 18 |
Fireman | 86 |
மொத்தம் | 1061 |
கல்விக்கான தகுதி:
பணியின் பெயர் | கல்வித்தகுதி |
Junior Translation Officer/Stenographer Grade-I | அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் உடன் கூடிய முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இளகலைப் பட்டப்படிப்புடன் மொழிபெயர்ப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். |
Stenographer Grade-II/Administrative Assistant/Store Assistant/Security Assistant | 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
Vehicle Operator/Fire Engine Driver/Fireman | 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
சம்பளம் :
பணி | சம்பளம் |
JTO & Stenographer Grade-I (English Typing) | ரூ.35,400-1,12,400 |
Stenographer Grade-II | ரூ.25,500-81,100/- |
மற்ற பணியிடங்களுக்கு | ரூ.19,900-63,200/- |
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட DRDO இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும்.
இதையும் வாசிக்க: SSC : 12ம் வகுப்பு பாஸா? ரூ.92ஆயிரம் வரை சம்பளம்.. 4500 காலியிடங்களுக்கான விவரம் இதுதான்!
மேற்கண்ட பதவிகளுக்கு இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs