• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert: 35000/- சம்பளம் தேர்வு இல்லை ... DRDO-யில் காலிப்பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க இன்னும் 2 நாள் தான் இருக்கு

Job Alert: 35000/- சம்பளம் தேர்வு இல்லை ... DRDO-யில் காலிப்பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க இன்னும் 2 நாள் தான் இருக்கு

DRDO-யில் காலிப்பணியிடம்

DRDO-யில் காலிப்பணியிடம்

DRDO-யில் காலியாக உள்ள Junior Research Fellow (JRF) ,Senior Research Fellow (SRF) பணியிடங்களுக்குவிண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2021.

  • Share this:
    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) என்பது ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புதுதில்லியில் அமைந்துள்ளது.

    இது 1958இல் நிறுவப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதும் 51 கிளைகள் உள்ளன. இது பாதுகாப்பை சார்ந்த எல்லா துறைகளிளும் உள்ளது. உதாரணமாக வானூர்தி இயல், தளவாடங்கள், மின்னணுவியல் மற்றும் கணினியியல், மனித வள மேம்பாடு, வாழ்வியல், மூலப்பொருள்கள், ஏவுகணை, கவச தாங்கி போன்ற பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.

    இவ்வமைப்பில் 5000 ஆராய்ச்சியாளர்கள் மற்றும் 25000 ஊழியர்கள் பணியில் உள்ளனர். இந்நிறுவனம் 1958 இல் பாதுகாப்பு அறிவியல் அமைப்பினையும் மற்றும் வேறு சில தொழில்நுட்ப அமைப்புகளையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது ஆகும். இங்கு தற்போது காலியாக உள்ள Junior Research Fellow (JRF) ,Senior Research Fellow (SRF) பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    வேலைக்கான விவரங்கள் : 















































    விளம்பர எண் 05-2021/JRF/SRF/DIAT(DU)
    நிறுவனம் DRDO


     

    பணியின் பெயர்


     

    Junior Research Fellow (JRF)

    Senior Research Fellow (SRF)
    காலிப்பணியிடங்கள் 02
    பணியிடம் Pune, Maharashtra, India
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.


     

    தேர்வு செய்யப்படும் முறை
    விண்ணப்பித்தவர்கள் நேர்காணலுக்கு தகுதி உடையவர்களுக்கு அழைப்பு வரும். நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
    வயது JRF - Not to exceed 28 Years
    SRF - 30 Years


     

    சம்பள விவரம்
    Junior Research Fellow - Rs. 31000/- (Consolidated)
    Senior Research Fellow - 35000/- (Consolidated) per month
    விண்ணப்ப கட்டணம் NO Fees
    விண்ணப்பிக்க கடைசி தேதி 12.08.2021

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.drdo.gov.in/whats-new

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.drdo.gov.in/sites/default/files/whats_new_document/AdvtNoDIAT05_2021.pdf

    டி.ஆர்.டி.ஓ ஆட்சேர்ப்பு 2021 க்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் உங்கள் பயோ-டேட்டாவை முறையாக கையொப்பமிடப்பட்ட பின்னர் , பிறந்த தேதி மற்றும் இறுதி ஆண்டு சான்று / முந்தைய ஆண்டு மார்க்ஷீட் (கிடைத்தால்) முதன்மை புலனாய்வாளரின் மின்னஞ்சல் ஐடியில் @diat.ac.in "JRF/SRF க்கான விண்ணப்பம்" என்ற தலைப்பில் 12 ஆகஸ்ட், 2021 அல்லது அதற்கு முன் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

    நேர்முகத் தேர்வுக்கு பட்டியலிடப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் DIAT இணையதளத்தில் கிடைக்கும் அல்லது விண்ணப்பித்தவர்களில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: