கைவினை பயிற்றுவிப்பாளராக வேண்டுமா?

news18india
Updated: May 24, 2018, 7:21 PM IST
கைவினை பயிற்றுவிப்பாளராக வேண்டுமா?
கோப்புப் படம்
news18india
Updated: May 24, 2018, 7:21 PM IST
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்  அமைச்சகத்தின் சார்பில் கைவினை பயிற்றுவிப்பாளர் (Craft Instructor) பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பயிற்சி படிப்புகளுக்கான சேர்க்கை 30.06.2018 அன்று நடைபெறவுள்ள அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும். நாட்டின் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ள இந்த நுழைவுத் தேர்வில் கலந்துகொள்ள   www.nimionlineadmission.in மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனியார் பயிற்சி மையங்களுக்கான சேர்க்கையும் இந்த நுழைவுத் தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும். ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 30.05.2018. பதிவு செய்வது தொடர்பான விவரங்கள் மற்றும் அனைத்து பயிற்சி மையங்கள் குறித்த தகவல்கள் இணையதளத்தில் உள்ளன. விண்ணப்பதாரர், தம்முடைய விருப்பமான 5 பயிற்சி மையங்களின் பெயர்களை வரிசையாக குறிப்பிட வேண்டும்.


விண்ணப்ப படிவம், தகுதி, வயதுவரம்பு மற்றும் கட்டணம், ஆன்லைன் / OMR அடிப்படையிலான தேர்வு, தேர்வு மையம், தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் பற்றிய மேலும் விவரங்களுக்கு  www.nimionlineadmission.in & citsadmission.atichennai.org.in. ஆகிய வலைதளங்களை தொடர்புகொள்ளவும்.  மேலும் தகவலுக்கு 08527568928 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.

ஆன்லைன் சேர்க்கை பற்றிய சிக்கல்களுக்கு 044-22500791 என்ற எண்ணை திங்கள் முதல் வெள்ளி வரை 9.00 முதல் மாலை 5.30 மணி வரை தொடர்பு கொள்ளவும்.  இ-மெயில் விசாரணை  nimionlineadmission@gmail.com என்ற இமெயிலுக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.
First published: May 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...