ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தீபாவளிக்கு போனஸ் கட்டாயமா? ரூல் என்ன சொல்லுது? போனஸில் பல விஷயம் இருக்கு.. தெரிஞ்சுக்கோங்க!

தீபாவளிக்கு போனஸ் கட்டாயமா? ரூல் என்ன சொல்லுது? போனஸில் பல விஷயம் இருக்கு.. தெரிஞ்சுக்கோங்க!

காட்சிப் படம்

காட்சிப் படம்

Deepavali bonus 2022 Tamil Nadu: அதிகபட்ச போனஸ் தொகையாக, ஊழியரின் ஊதியத்தில் 20% வரை வழங்கபட வேண்டும். குறைந்தபட்ச தொகையாக 8% வரை வழங்கப்பட வேண்டும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    இந்தியாவில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என  மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும், அதை நிறைவேற்றுவதற்கான பல்வேறு வகையான வாய்ப்புகளையும் உருவாக்கும்  களமாக இந்த திருநாள்  திகழ்கிறது. அந்த வகையில், போனஸ் என்பது உழைக்கும் மக்களின் அடிப்படை எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.  எனவே, அதுகுறித்த சில கேள்வி பதில்களை இங்கே காண்போம்.

    போனஸ் என்றால் என்ன? எதற்காக? 

    ஒரு தலைமுறையால் உற்பத்தி செய்ய முடியாத ஒன்றை, இன்று ஒரு இயந்திரம் ஒரே நாளில் செய்து குவிக்கும் அளவுக்கு  இன்றைய மூலதனத்தின் சக்தி உள்ளது. இருந்தாலும், தொழிலாளி வர்க்கத்தின் முக்கியத்துவம் குறையாது. ஏனெனில், உழைப்பு என்பது தனிமனித நடவடிக்கை அல்ல. அதனிடம் சமூகப் பண்பு உள்ளது. உழைப்பின் வரலாறு தான் மனித சமூகத்தின் வரலாறு என்ற கூற்றும் உண்டு. எனவே, முதலாளிகள் சம்பாதிக்கும் லாபத்தொகையில் இருந்து, உழைப்பைச் செலுத்தும் தொழிலாளிகளுக்கும் பங்கு தர வேண்டும் என்கிற நோக்கில் 1965ம் (Payment of Bonus Act, 1965) ஆண்டு தொழிலாளர்களுக்கான போனஸ் வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது.      

    யாருக்கு போனஸ்: 

    இச்சட்டத்தின் கீழ், 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலார்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள் மற்றும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களில் (factory and every establishment) பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இலாபத்தின் அடிப்படையில்  கட்டாயம் போனஸ் வழங்கப்பட வேண்டும்.

    எனவே, 20க்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் போன்ற தொழில் நிறுவனங்களில் நீங்கள் பணி புரிந்தால் உங்களுக்கு கட்டாயம் போனஸ் வழங்கப்பட வேண்டும்.

    போனஸ் பெறுவதற்கான தகுதி ?

    முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு போனஸ் வழங்கள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. தற்போதைய திருத்த  சட்டத்தின் படி கட்டணம், போனஸ் பெறுவதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து மாதத்திற்கு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, உங்களது மாதச் சம்பளம் ரூ.21 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு போனஸ் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.

    போனஸ் தொகை எவ்வளவு? 

    போனஸ் கணக்கீட்டிற்கு, ஊழியர்களின் ஒருமாத சம்பளம் ரூ.7000 (அல்லது அந்ததந்த தொழில்களுக்கு  அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச போனஸ் தொகையாக, ஊழியரின் ஊதியத்தில் 20% வரை வழங்கபட வேண்டும். குறைந்தபட்ச தொகையாக 8% வரை வழங்கப்பட வேண்டும்.

    தீபாவளிக்கு கட்டாயம் போனஸ் வழங்கப்பட வேண்டுமா? 

    போனஸ் வழங்கல் சட்டத்தின் படி, ஒரு நிதியாண்டின் முடிவில் இருந்து, 8 மாதங்களுக்குள் போனஸ் தொகை வழங்கப்பட வேண்டும். தீபாவளிக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும் என்ற சட்டத்தில் சொல்லப்பட வில்லை, இருந்தாலும், மரபின் படி பெரும்பாலான தனியார் நிறுவங்களும், அரசாங்களும்    தீபாவளி பண்டிகையை முன்னதாகவே போனஸ் தொகையை வழங்குகின்றன.

    இதையும் வாசிக்கஈசியா கிடைக்கும் அரசு வேலை.. டிஎன்பிஎஸ்சி தேர்வில் எளிமையா பாஸ் இப்படி ஒரு வழி இருக்கு!

    Published by:Salanraj R
    First published:

    Tags: Diwali bonus, Jobs