ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சைக்கிள் ஓட்ட தெரியுமா? ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை

சைக்கிள் ஓட்ட தெரியுமா? ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

Office Assistant and Night Watchman Recruitment: அலுவலக உதவியாளர்பதவிக்கு 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; மிதிவண்டி ஊட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Dindigul |

  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றியங்களில்  காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறை  நாளையுடன் முடிவடைகிறது.  எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  பணியிடங்கள் விவரம்:

  கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் 4 அலுவலக உதவியாளர் காலி இடங்கள் உள்ளன. குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் 3 அலுவலக உதவியாளர் காலிஇடங்களும் , ஒரு  இரவுக்காவலர் இடங்களும் உள்ளன. வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு  இரவுக்காவலர் காலியிடம் உள்ளது.  வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 3 அலுவலக உதவியாளர் இடங்கள் உள்ளன.  தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் – 2 அலுவலக உதவியாளர் இடங்களும்  ஒரு இரவுக்காவலர் பணியும் உள்ளது. ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 அலுவலக உதவியாளர் இடங்கள் உள்ளன.

  அலுவலக உதவியாளர் கல்வித்தகுதி:  8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். இரவுக் காவலர் பணிக்கு எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

  சம்பளம்:

  1) அலுவலக உதவியாளர் : ரூ.15,700/- (15700-50000)

  2) இரவுக்காவலர் : ரூ.15,700/- (15700/- 50000)

  அடிப்படைத் தகுதிகள்:

  விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

  இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

  ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் காலி பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

  அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

  இதையும் வாசிக்க2748 கிராம உதவியாளர் பணியிடங்கள்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

  விண்ணப்பபம் செய்வது எப்படி?  சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14.10.2022 பிற்பகல் 5.45 மணிக்குள் ஆணையாளர், தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம் முகவரிக்கு நேரிலோ, அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

  தேர்வு செய்யப்படும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) அனுப்பி வைக்கப்படும்.

  காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதள (National Career Service Portal) www.ncs.gov.in மற்றும் மாவட்ட இணையதள dindigul.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  மேலும், விவரங்களுக்கு:

  Dindigul District – Kodaikanal Panchayat Union Recruitment

  Guziliamparai Panchayat Union Recruitment

  Vadamadurai Panchayat Union Recruitment

  Vedasandur Panchayat Union Recruitment

  Thoppampatti Panchayat Union Recruitment

  Oddanchatram Panchayat Union Recruitment

  Published by:Salanraj R
  First published:

  Tags: Job Vacancy, Recruitment